தேனுவை காப்பற்றி கூட்டிப் போகும் சக்தி… தென்னரசின் புதிய திட்டம்… சக்திவேல் தொடரின் இன்றைய எபிசோட்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சத்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் தேனுவின் கர்ப்பத்தை கலைக்க கூட்டிச் சென்ற தென்னரசை சக்தியும் வேலுவும் கண்டுபிடித்து விடுகின்றனர். பின்னர் சக்தி ஹாஸ்பிடலில் எமெர்ஜென்சி அறையில் இருந்த தேனுவை காப்பாற்றி விடுகிறாள். வெளியே தென்னரசு உங்களை சும்மா விட மாட்டேன் என்று கூறுகிறான் அதோடு நேற்றைய எபிசொட் முடிந்திருந்தது.

அதை தொடர்ந்து இன்றைய எபிசோடில், வேலுவும் தென்னரசும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். வேலு தென்னரசை எச்சரிக்கை செய்கிறான். பின்னர் சக்தி தேனுவை எமெர்ஜென்சி அறையில் டாக்டரிடம் சண்டை போட்டு அங்கிருந்து வெளியே கூட்டிக்கொண்டு வருகிறாள்.

அதைப் பார்த்த தென்னரசு ஆத்திரம் அடைகிறான் எங்கள் விஷயத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என்று கோபப்படுகிறான். பதிலுக்கு சக்தி மாமா நீங்க பன்றது ரொம்ப தப்பு, இரண்டு மாத பிஞ்சு குழந்தை உங்களுக்கு என்ன துரோகம் பண்ணிச்சு, அதை கொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்தது என்று கேட்கிறாள். அத்தையிடமும் மாமாவிடமும் இதைப் பற்றி கூறப் போகிறேன் என்று சொல்கிறாள்.

அதற்கு தென்னரசு சக்தியிடம் நீ அப்பா அம்மாவிடம் சொல்லுவேன் என்றால் நான் பயந்து விடுவேனா, நான் சொல்றதை தான் அப்பாவும் சொல்லுவார் பார் என்று கூறிவிட்டு சென்று விடுகிறான். குருஜி பெயரை சொல்லி இந்த குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று அப்பாவிடம் கூறி சம்மதிக்க வைப்போம் என்று தென்னரசு புதிய திட்டம் போடுகிறான்.பின்பு வேலுவும், சக்தியும் தேனுவை வீட்டுக்கு கூட்டிச் செல்கின்றனர்.

போகும் வழியில் தேனு சக்திக்கும் வேலுவிற்கும் நன்றி சொல்கிறாள். உங்களால் தான் இன்று என் குழந்தை உயிரோடு இருக்கு என்று கூறுகிறாள். ஆனால் அவரது கணவன் தென்னரசு அடுத்ததாக என்ன செய்ய போகிறாரோ என்று பயப்படுகிறாள். என்ன ஆனாலும் உங்களுக்கு நானும் வேலுவும் துணையா இருப்போம் என்று சக்தி ஆறுதல் கூறுகிறாள். இதோடு இன்றைய எபிசொட் முடிந்தது. மேலும் பல தகவல்களுக்கு விஜய் டிவியை காணாதவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...