காமெடிப் படம் தான்… ஆனா காட்சிக்குக் காட்சி இப்படி ஒரு கருத்தா? 1941-ல் வியக்க வைத்த தமிழ்ப்படம்!

கலைவாணர் என்றாலே தனது காமெடி வசனங்கள் மூலம் சமூகக்  கருத்துக்களை நகைச்சுவையாகச் சொல்லுவதில் வல்லவர். இதற்கு அடுத்ததாக சின்னக் கலைவாணர் என்று போற்றப்பட்டவர் விவேக். காமெடி மூலம் சமூகக் கருத்துக்களைச் சொல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ரசிகனுக்குப் புரியும்படி அதை காமெடி வசனங்களாக எழுதி கொண்டு சேர்ப்பது என்பது யானையைக் கட்டி இழுப்பதற்குச் சமம். ஆனால் இதை 1941-ம் ஆண்டிலேயே அசால்ட்டாக செய்திருக்கிறது தமிழ் சினிமா.

ஏ.வி.எம். தயாரிப்பில் 1941-ல் வெளிவந்த முழுநீள காமெடி படமான சபாபதி தான் அது. ஒரு முறை அல்ல, பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம். TR.ராமச்சந்திரன், லக்ஸ் சோப் பத்மா, காளி ரத்னம், ராஜ காந்தம் ,சாரங்கபாணி ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தில் ஒரு காட்சியில் கூட சோகம் என்பதே இருக்காது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சுவரசியம் குறையாது.

இந்த 1941ல் தான் எடுக்கப்பட்டதா என சந்தேகம் அடிக்கடி வரும். பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகத்தை, ஏ.வி. மெய்யப்ப செட்டியார் திரைப்படமாக எடுத்திருப்பார். அக்கால கட்ட நாடகங்கள் நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று.

செல்வந்தர் மாணிக்க முதலியாரின் ஒரே மகன் சபாபதி, பள்ளி இறுதி வகுப்பில் படிப்பவர், தேர்வில் தோல்வியுற்றவர், அவர் வீட்டு வேலைக்காரன் பெயரும் சபாபாதி தான். இவரோ பெரும் அப்பாவி, ” சோடா, உடைத்து எடுத்து வா என்றால் பாட்டிலை உடைத்து எடுத்து வருவார் “அவ்வளவு புத்திசாலி.

1941ல் பள்ளி தமிழ் ஆசிரியரை கிண்டல் செய்தல், வகுப்பறையில் தூங்கும் அவருக்கு மீசை வரைதல் என அப்போதே அலப்பறைகள் செய்துள்ளனர். ரோட்டில் செல்லும் யாரையாவது சீட்டு கட்டு விளையாட அழைத்து வா என, மாணவன் சபாபதி சொல்ல, வேலைக்காரன் சபாபதி அவ்வழியே செல்லும் அவர்கள் பள்ளி தமிழ் வாத்தியரை அழைத்து வர ஒரே ரகளை தான்.

நிஜத்தில் செருப்பால் அடித்த சோனியா அகர்வால் : பல ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உண்மை

சபாபதி பெயில் ஆனதும் தூக்கு போடுவதை போல் நடித்து அப்பாவின் கோவத்தில் தப்பிக்கிறார். உடனடியாக அவருக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பிக்கிறது. படித்த சிவகாமுவை மணமுடிக்கின்றனர். வேலைகாரன் சபாபதிக்கு சிவகாமு வீட்டு வேலைக்காரி குண்டுமுத்துவுடன் திருமணம் ஆகிறது. அதுவும் எப்படி என்றால் குண்டுமுத்து தூங்கும் போது சபாபதி தாலி கட்டி அடியும் வாங்கி கொள்கிறார். இதற்கு ஐடியா முதலாளி சபாபதி. படம் முழுக்க ஒரே சிரிப்பாக தான் இருக்கும்.

இந்தப் படத்தின் முக்கிய சமூகக் கருத்து என்னவென்றால் கணவருக்கு சொல்லி கொடுத்து அவரை பாஸ் செய்ய வைக்கும் அளவிற்கு பெண்கள் 1940களில் படித்துள்ளனர். வேலைக்காரன், வேலைக்காரி இருவரும் குடும்ப உறுப்பினர் போல நடத்தப்படுகின்றனர். வேலைக்காரியும் படித்துள்ளார் என்பது தான் அழுத்தமான செய்தி.

Published by
John

Recent Posts