நிஜத்தில் செருப்பால் அடித்த சோனியா அகர்வால் : பல ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உண்மை

சினிமாவில் சண்டைக் காட்சிகள் டூப் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கன்னத்தில் அறைவது, முத்தக் காட்சிகள் போன்றவற்றை டூப் இல்லாமல் எடுத்தால் அக்காட்சியின் தன்மையானது சற்று ஏமாற்றமளிக்கும். ஆனால் படப்பிடிப்பில் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காகவே நிஜமாகவே ஹீரோயின் ஹீரோவை செருப்பால் அடித்த உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

7G ரெயின்போ காலனி படத்தை பார்க்காத 90’s, 2K கிட்ஸ்கள் யாரும் இருக்க முடியாது. செல்வராகவன், நா.முத்துக்குமார், யுவன்சங்கர்ராஜா கூட்டணியின் மெகா பிளாக் பஸ்டர் படங்களில் இதுவும் ஒன்று. காதல் கொண்டேன் படத்திற்குப் பிறகு 7G ரெயின்போ காலணனி படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக அவதாரம் எடுத்தார் செல்வராகவன்.

மென்மையான காதல் கதையை யுவனின் இசையால் மனதை வருடி கிளைமேக்ஸை செதுக்கியிருப்பார் செல்வராகவன். நா.முத்துக்குமாரின் ஒவ்வொரு பாடல் வரிகளும் படத்திற்கு தாங்கிப் பிடிக்கும் தூண்களாக அமைந்தது. கிட்டத்தட்ட 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனையை நிகழ்த்தியது 7G ரெயின்போ காலனி.

கடந்த 2004-ல் வெளியான இத்திரைப்படத்தில் ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் உயிரோட்டமுள்ள கதைக் கரு, அழுத்தமான வசனங்கள், காட்சி அமைப்புகள் என அனைத்திலும் இப்படம் ஸ்கோர் செய்தது. இப்படத்தில் பேருந்தில் சோனியா அகர்வால் செல்லும் போது அவர் அருகே ரவிகிருஷ்ணா சென்று நிற்பார். திடீரென பஸ் பிரேக் பிடிக்க சோனியா அகர்வாலின் மேல் அவர் கை வைப்பார். உடனே சோனியா அகர்வால் கோபத்துடன் செருப்பை எடுத்து அடிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும்.

நளினி பற்றி ராமராஜன் சொன்ன ஒற்றை பதில்.. என்ன மனுஷன்யா..? ஆடிப்போன நிருபர்!

இந்த சீனில் நடிக்கும் போது நிஜமாகவே ரவி கிருஷ்ணா செருப்பால் அடி வாங்கினாராம். அண்மையில் 7G Reunion பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், அக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சோனியாவை நிஜமாகவே அடிக்கச் சொல்ல என்னை அவர் அடித்தார். இதேபோல் தெலுங்கு பதிப்பிற்கும் அடித்தார்.

ஆகவே இரண்டு முறை அடி வாங்கியுள்ளேன். நல்ல வேளையாக ஒரே டேக்கில் முடிந்து விட்டது. இல்லையெனில் பல முறை அடிவாங்கியிருப்பேன். மேலும் அக்காட்சிக்கு புதிய செருப்புதான் பயன்படுத்தப்பட்டது எனவும் அப்பேட்டியில் ரவிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பாடல்கள் மற்றும் இசைக்காகவே 7G ரெயின்போ காலனி பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...