கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூ.15,000… இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான்!!

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் பலரும் உணவிற்கு வழியின்றி தவித்து வருகையில், விளையாட்டு வீரர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், சினிமாப் பிரபலங்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ரஜினி, கமல், சல்மான்கான், ஷாருக்கான், லாரன்ஸ், அஜித், விஜய், சூர்யா, அக்‌ஷய்குமார், தனுஷ், சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி,  போன்றோர் மக்களுக்கு உதவி செய்ததோடு, அரசாங்கத்திற்கும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.


அந்த வகையில் நடிகர் அமீர்கான் வித்தியாசமான முறையில் உதவிகளை வழங்கி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அதாவது ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்ததை அடுத்து பலரும் வந்து வாங்கி சென்றனர்.

வீட்டுக்கு சென்று கோதுமை மாவு பாக்கெட்டைப் பார்த்தபோது அதில் ரூ.15,000 இருப்பது தெரியவந்தது. ஒரு கிலோ கோதுமை பாக்கெட் என்னும்போது சாப்பாட்டிற்கே வழி இல்லாதவர்கள் மட்டுமே வருவார்கள் என்று ஒரு ஐடியாவினை செயல்படுத்தி பலரது பாராட்டினையும் பெற்றுள்ளார். உண்மையில் இது சிலருக்கு இன்ப அதிர்ச்சியாகவும், பலருக்கு அதிர்ச்சியாகவும் உள்ளது.

Published by
Staff

Recent Posts