ஆசிய வீரராக ரோஹித் செஞ்ச சம்பவம்.. கோலி இதை நெருங்குறதுக்கே பல வருஷம் ஆகும் போல..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி இருந்த மும்பை அணியில் மற்ற வீரர்கள் யாருமே பெரிதாக ரன் சேர்க்க தடுமாற தொடக்க வீரராக களமிறங்கியிருந்த ரோஹித் ஷர்மா கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்றதுடன் 105 ரன்கள் எடுத்திருந்தார்.

ஐபிஎல் தொடரில் இது அவரது இரண்டாவது சதமாக பார்க்கப்படும் சூழலில், ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு பின்னர் தனது ஐபிஎல் சதத்தையும் அவர் அடித்துள்ளார். ஆனால் அதே வேளையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்ததால் சதம் அடித்தும் பெரிதாக அதனை கொண்டாடாமல் சற்று கலக்கத்திலும் ரோகித் இருந்ததாக தெரிகிறது. போட்டி முடிந்து செல்லும் சென்ற போது கூட ரோஹித் சற்று வருத்தத்தில் இருந்ததாக தான் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து பின்னர் மீண்டும் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற மும்பை அணி தற்போது மீண்டும் தோல்வி அடைந்துள்ள நிகழ்வு, அந்த அணியின் ரசிகர்களுக்கு நல்ல ஒரு கலக்கத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். மீதமுள்ள 8 போட்டிகளில் 6 முதல் 7 போட்டிகளிலாவது அவர்கள் வென்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியான ஒரு சூழலும் உள்ளது.

ரோஹித் ஷர்மாவின் சதம் வீணாய் போனாலும், அவர் சில முக்கியமான சாதனைகளையும் இதன் மூலம் படைத்திருந்தார். ஐபிஎல் தொடரில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்த ரெய்னாவின் சாதனையை நொறுக்கிய ரோஹித் ஷர்மா, 800 ரன்களை கடந்திருந்தார்.

இந்த நிலையில் முதல் ஆசிய கிரிக்கெட் வீரராக டி 20 போட்டிகளில் முக்கியமான வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தி காட்டியுள்ளார் ரோஹித் ஷர்மா. இவர் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக இதுவரை 502 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலிலேயே முதன் முதலாக 500 சிக்சர்களை அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் ரோஹித் ஷர்மா.

இவருக்கு அடுத்தபடியாக, இந்திய வீரர்களில் விராட் கோலி டி 20 போட்டிகளில் மொத்தம் 383 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதனால், ரோஹித் டி 20 போட்டியில் இருந்து ஓய்வினை அறிவித்தால் கூட அவரது இந்த இமாலய சாதனையை நெருங்க நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...