ரோகிணி மெயின் ஸ்க்ரீன் ரெடி!.. நாளை லியோ கன்ஃபார்மா ரிலீஸ் ஆகுது!..

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் லியோ படத்தின் டிரைலர் வெளியான நிலையில், தியேட்டருக்குள் அதிக எண்ணிக்கையில் விஜய் ரசிகர்கள் நுழைந்த நிலையில், மெயின் ஸ்கிரீனில் இருந்த ஒட்டுமொத்த இருக்கைகளையும் அடித்து நொறுக்கி நாசமாக்கி விட்டனர்.

ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற அந்த கசப்பான சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இன்று மாலை வரை ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியாகாது, என்கிற நிலையே நீடித்து வந்த நிலையில், தற்போது ரோகிணி தியேட்டர் நிர்வாகம் தங்களின் மெயின் ஸ்கிரீன் 10 நாட்களில் அதிவிரைவாக ரெடியாகி இருப்பதாகவும் நாளை முதல் லியோ ரோகிணி திரையரங்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரோகிணி தியேட்டரிலும் லியோ:

மேலும் நடிகர் விஜய்க்கு தனது நன்றிகளையும் கூறியுள்ளார். ரோகிணி திரையரங்கம் விஜய் ரசிகர்களால் பாதிக்கப்பட்ட நிலையில், அதனை சரி செய்ய நடிகர் விஜய் பணம் கொடுத்துள்ளாரா? அதற்காகத்தான் ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விஜய்க்கு நன்றி தெரிவித்து வருகிறதா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

ரசிகர்களின் கோட்டை என அழைக்கப்படும் ரோகிணி தியேட்டரில் லியோ திரைப்படமே வெளியாகாது என்கிற பலகை இன்று வைக்கப்பட்ட நிலையில், ட்விட்டரில் இந்திய அளவில் மிகப்பெரிய ட்ரெண்டிங்கை அந்த ஹேஷ்டேக் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பிரச்சனைகளும் சால்வ்:

கடைசி நேரத்தில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி, ஒட்டுமொத்த திரையரங்குகளிலும் நாளை லியோ திரைப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் காலை 9:00 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட உள்ள நிலையில், உலகம் முழுவதும் அதிகாலை 4:00 மணிக்கு பல நகரங்களில் லியோ திரைப்படம் ரிலீசாகிறது.

லியோ படத்திற்கான விமர்சனங்கள் மற்றும் பாராட்டு, ட்ரோல், சர்ச்சைகள் என அனைத்தும் சமூக வலைத்தளத்தில் நாளை ஆட்சி செய்யும் என தெரிகிறது.

வசூல் வேட்டைக்கு லியோ ரெடி:

லியோ திரைப்படம் எல்சியூ என உதயநிதி ஸ்டாலின் கொளுத்திப் போட்டுள்ள நிலையில், அதன் பக்கத்தில் உள்ள கண்ணடிக்கும் எமோஜி பாத்திங்களா? என லோகேஷ் கனகராஜ் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

லியோ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்கள் 300 கோடி வசூலை அதிகபட்சமாக ஈட்டிய நிலையில், லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் இணைந்து இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுக்க காத்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews