ஜோதிடம்

ரிஷபம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் ஆதாயங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். சுக்கிர பகவான் 5 ஆம் இடத்தில் நீச்சம் அடைந்துள்ளார். சுக்கிரனின் இட அமைவு உங்களுக்குப் பலவீனமானதாக அமையும்.

2 ஆம் அதிபதியான புதன் பகவான் 7 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். புதன் பகவானின் இட அமைவு ஆழ் மனதில் மனக் கவலை, சஞ்சலம் மற்றும் குழப்பத்தினை ஏற்படுத்தும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சுக்கிர பகவான் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் இடப் பெயர்வு செய்கிறார். யாருக்கேனும் வாக்குக் கொடுக்கும் பட்சத்தில் அதனைக் காப்பாற்ற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். அதனால் வாக்குக் கொடுக்கும்போது ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் வேண்டும்.

முடிந்தளவு சொல்லிவிட்டுச் செய்வதைக் காட்டிலும் செய்துவிட்டு சொல்வது சிறப்பாக இருக்கும். கார்த்திகை முதல் பாதியில் பொறுமை மற்றும் நிதானத்தைக் கடைபிடித்தல் வேண்டும். பல விஷயங்களில் நீங்கள் சட்டென்று முடிவெடுப்பதைக் காட்டிலும் சற்றே அமைதி காட்டுவது நல்லது.

புதன் பகவான் 7 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானுடன் இணைந்து இட அமர்வு செய்துள்ளார். புதன்- செவ்வாய் பகவானின் கூட்டணி நடக்குமா? நடக்காதா? என்று நினைக்கும் வகையிலேயே அனைத்து விஷயங்களும் இருக்கும்.

மனதளவில் சில நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். ரிஷப ராசி என்று கொண்டால் கேது பகவான் 5 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். கேது பகவான் உங்களுக்குப் பக்க பலமாக இருந்து தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொடுப்பார்.

குழப்பத்தில் இருக்கும்போது ஆழ் மனது சொல்லும் விஷயங்களைக் கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். வீடு, மனை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க நினைப்போர் காலம் தாழ்த்தாமல் வாங்கலாம். சூர்யன்- புதன் கூட்டணியால் தாயின் உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் இருக்கும். தாயாரின் உடல் நலன் ரீதியாக மருத்துவச் செலவினங்கள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வாருங்கள்; செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

Published by
Gayathri A

Recent Posts