இங்கிலீஷில் கதை சொல்லி ரேவதியை அசத்திய இயக்குனர்!

இயக்குநர் இமயம் பாரதி ராஜா மண்வாசனை படத்திற்கு கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தபோது, ரேவதிதான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தார். 16வயதே ஆன ரேவதி படத்தில் நடிக்க அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

ரேவதி, பாண்டியன் மற்றும் விணு சக்கரவர்த்தி நடித்து 1983ல் வெளிவந்தப் படம் மண்வாசனை. வெள்ளி விழா கொண்டாடிய அப்படத்திற்கு இளையராஜாவின் இசை மற்றொரு போனஸ்.

தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார். மாறுபட்ட படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். அவர் இயக்கிய படம்தான் கை கொடுக்கும் கை. கண்பார்வை இல்லாதவராக நடிக்க வீட்டில் தினமும் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். கை கொடுக்கும் கை ரேவதிக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது. சின்னி ஜெயந்த் இந்த படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பின் பாண்டியராஜன் இயக்கத்தில் ஆண்பாவம் படத்தில் நடித்தார். அந்த படத்தில் பாண்டியராஜனும், வி.கே ராமசாமியும் பேசும் வசனங்கள் இன்றும் அனைவரும் ரசித்து சிரிக்கும் படி இருக்கும். பிரபு, கவுண்டமணி கூட்டணியில் ரேவதி இணைந்து கலக்கிய படம் கன்னி ராசி. அமைதியான பெண்ணாக நடித்து வந்த ரேவதி அரங்கேற்ற வேளை படத்தின் மூலம் துடுக்கு தனமான பெண்ணாக மாறி ரசிக்க வைத்தார்.

இப்படி பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரேவதிக்கு தான் யார் என்பதை அடையாளப்படுத்திய படம் மெளன ராகம். மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட ரேவதிக்கு, தொடர்ந்து தமிழில் படம் நடிப்பது கடினமாக இருந்தது. நாளடைவில் தமிழ் மொழிக்கு பழக்கப்பட்டார்.

அதுவரை தமிழில் இயக்குனர்கள் கதை சொல்வதை கேட்ட ரேவதிக்கு, முதல் முறையாக ஆங்கிலத்தில் கதை கேட்டது பேரானந்தமாக இருந்தது. அப்படி ஒரு ஆனந்தத்திற்கு உள்ளாக்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.

மோகன், ரேவதி, கார்த்திக் இணைந்து நடித்த இப்படம் இன்றும் காதலர்கள் கொண்டாடும் படம். பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில், இந்தக் காலகட்டத்தில் வரும் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும். மெளன ராகத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கதில் ரேவதி நடித்த படம் ‘அஞ்சலி’. மோகன் நடிக்க மறுத்ததால், ரகுவரன், ரேவதி இணைந்து நடித்தனர். இருப்பினும் ‘அஞ்சலி’யும் மாபெரும் வெற்றியடைந்து குழந்தைகளாலும் கொண்டாடப்பட்ட படம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews