மும்பை சாலையோர கடைகளில் பிரபலமான உணவு…தவா புலாவ் செய்வது எப்படி?

புலாவில் பல்வேறு வகையான புலாவுகள் இருக்கின்றன அவற்றுள் ஒன்றுதான் தவா புலாவ். புலாவ் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. ஒரே பாத்திரத்தில் ஏதாவது உணவு சமைக்க வேண்டும் என்று நினைத்தால் புலாவ் அதிகபட்ச தேர்வாகிவிடும். இந்த தவா புலாவ் மும்பையில் சாலையோர கடைகளில் விற்கப்படும் ஒரு பிரபலமான உணவு.

தவா புலாவ்

 

வெண்ணெய் மற்றும் மசாலாக்கள் கலந்த இந்த தவா புலாவ் சுவை பலரையும் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டி விடும். பார்ப்பதற்கு கண்களைக் கவரும் உணவு மட்டும் அல்ல சுவையிலும் அருமையான உணவு தவா புலாவ். இந்த தவா புலாவ் சாதம்‌ அதிகம் மிச்சமாகி விட்டால் அதை வைத்து செய்யக்கூடிய உணவாகும்.

தவா புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
  • பாஸ்மதி அரிசி – ஒரு கப்
  • வெண்ணெய் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • குடைமிளகாய் – ஒன்று
  • தக்காளி – மூன்று
  • பாவ் பாஜி மசாலா – மூன்று ஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் -இரண்டு ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு – 2
  • பட்டாணி – அரை கப்
  • மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

images 3 16

தவா புலாவ் செய்யும் முறை:

பாஸ்மதி அரிசியை ஊற வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு பட்டாணி ஆகியவற்றை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சாதம் வெந்ததும் சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் வெறும் மிளகாய்த்தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

உப்பு மற்றும் கரம் மசாலாவை சேர்த்து பின்பு பாவ் பாஜி மசாலாவை சேர்க்கவும்.

ஏற்கனவே வேக வைத்துள்ள உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

ஆஹா! குழந்தைகளுக்கு சத்தான சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… கொண்டைக் கடலை புலாவ்!

சிறிதளவு கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி தூவி கிளறவும்.

இறுதியாக நாம் வடித்து வைத்த பாஸ்மதி சாதத்தை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சுவையான ரோட்டு கடை தவா புலாவ் தயார்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews