நான் ஒரு தடவ சொன்னா டயலாக்.. டேக் போறதுக்கு முன்னாடி ரஜினி பாத்த வேலை.. மாஸ் வசனத்தின் ஹிட் ரகசியம்..

இன்று நம்மிடையே இருக்கும் பலரும் சினிமாவில் மிக ஹிட்டான வசனங்களை சாதாரணமாக நமது நண்பர்களிடமோ நம்மை சுற்றி இருப்பவர்களிடமோ பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த அளவுக்கு சினிமாவில் வரும் வசனங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கெல்லாம் தமிழ் சினிமாவில் பிதாமகனாக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சமீப காலமாக ரஜினி திரைப்படங்களில் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் குறைவாக இருந்தாலும் ஒரு காலத்தில் அவர் பேசிய வசனங்கள் இந்த தலைமுறை இளைஞர்கள் மத்தியிலும் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. பாட்ஷா படத்தில் வரும் ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’, படையப்பா படத்தில் வரும் ‘என் வழி, தனி வழி சீண்டாத’, அருணாச்சலம் படத்தில் வரும் ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’, முத்து படத்தில் வரும் ‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது’ என ரஜினி ஒவ்வொரு திரைப்படங்களிலும் பேசிய வசனங்கள் ரசிகர்களை எந்த காலத்திற்கும் ஈர்த்து வருவதாக அமைந்துள்ளது.

அப்படி இருக்கையில் ரஜினியின் படத்தில் பலருக்கும் ஃபேவரைட் திரைப்படமான பாட்ஷாவில் ரஜினி பேசிய ‘நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி’ என்ற வசனம் உருவான காரணம் பற்றி தற்போது பார்க்கலாம்.

பாட்ஷா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, இதில் ரஜினியுடன் நக்மா, விஜயகுமார், ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிளாக்பஸ்டர் ஹிட் படமான இதன் படப்பிடிப்பின் போது ‘நான் ஒருவாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்னது மாதிரி’ என்று தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியிருந்தார்.

தொடர்ந்து படப்பிடிப்பிற்கும் தயாராகி இந்த வசனம் எடுப்பதற்கு முன்பாக, நடிகர் ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவிடம், ‘ஒருவாட்டி என்று சொன்னால் நன்றாக இருக்குமா? அல்லது ஒரு தடவை என்று சொன்னால் நன்றாக இருக்குமா’ என்று கேட்டுள்ளார். ஒரு தடவை தான் சிறப்பாக உள்ளது என்றும் சுரேஷ் கிருஷ்ணா ஆலோசனை கொடுக்க, டக்குன்னு டேக்கில் பேசிய ரஜினி, ‘நான் ஒரு தடவை சொன்னா’ என மாற்றி சொல்லி இருந்தார்.

வசனமாக சொல்வதற்கு மிக அற்புதமாக ரஜினி ஸ்டைலில் சிறப்பாக அமைந்திருந்ததால் அங்கிருந்த அனைவருமே இந்த வசனத்தை வியந்து பார்த்தனர். அது மட்டுமில்லாமல் இந்த வசனம் பேசி முடித்த கொஞ்ச நேரத்திலேயே செட்டில் இருந்த ஒரு நபரும் கூட ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என இந்த வசனத்தையே பேச ஆரம்பித்து விட்டார். சூட்டிங் ஸ்பாட்டில் இந்த வசனம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் படம் வெளியாகி இன்று வரையிலும் பலரும் பயன்படுத்தும் ஒரு வசனமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews