SRH Vs RCB : ஒரே போட்டியில் தவிடு பொடியான ரெக்கார்டுகளின் முழு விவரம்.. மிரட்டல் சம்பவத்தின் பின்னணி..

ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒரே போட்டியில் டி 20 மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் இவை முறியடிக்கப்பட இன்னும் பல காலங்களாகும் என்ற ஒரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 287 ரன்களும் பின்னர் இலக்கை நோக்கி ஆடி இருந்த பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக் உதவியுடன் 262 ரன்களும் எடுத்திருந்தது.

ஒரே ஒரு சிறப்பான ஓவர் கிடைத்திருந்தால் நிச்சயம் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒரு இமாலய சாதனையை டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே படைத்திருக்கவும் வாய்ப்பு உருவாகி இருந்திருக்கும். ஆனால் நடுவே சில விக்கெட்டுகள் விழுந்ததன் காரணமாக அவர்களால் வெற்றி இலக்கை நெருங்க மட்டுமே முடிந்திருந்தது.

இதற்கு முன்பு மும்பை அணிக்கு எதிராக இதே தொடரில் 277 ரன்கள் அடித்திருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அதனை அடுத்த இரண்டு வாரத்திலேயே முறியடித்து அவர்களின் அதிகபட்ச ஸ்கோரை அவர்களே முறியடித்து புதிய சரித்திரத்தை ஐபிஎல் தொடரில் எழுதி உள்ளனர்.

டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் க்ளாஸன், அப்துல் சமாத், பாப் டு பிளெஸ்ஸிஸ், கோலி, தினேஷ் கார்த்திக் என பலரின் அதிரடி ஆட்டம், ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய, பல விஷயங்கள் கவனம் ஈர்க்கப்பட்டு வரும் அதே வேளையில் சில முக்கியமான சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ளதை பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 549 ரன்கள் எடுத்துள்ளது. மொத்தம் 40 ஓவர்களில் இத்தனை ரன்களை எந்த ஒரு டி 20 போட்டியில் எந்த அணிகளுமே இணைந்து எடுத்தது கிடையாது. இதே போல ஒரு இன்னிங்ஸில் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அடித்த 22 சிக்ஸர்கள் தான் அதிக சிக்ஸர்களாக அமைந்துள்ளது.

மேலும் அதிகபட்ச ஸ்கோர், சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் என ஐபிஎல் போட்டியில் பல்வேறு சாதனைகள் இந்த ஒரே போட்டியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரே ஐபிஎல் சீசனில் இரண்டு முறை 250 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணி ஹைதராபாத் என்பதும், மேலும் இரண்டு முறை 270 ரன்களுக்கு மேல் டி 20 போட்டிகளில் அடித்த அணி என்ற பெருமையுடன் சேர்த்து அவர்கள் பெற்றுள்ளனர்.

அதேபோல இந்த போட்டியில் 43 ஃபோர்களும் 38 சிக்ஸர்களும் மொத்தம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் பல மகத்தான சம்பவங்கள் அரங்கேறி வருவதால் இனி வரும் போட்டிகளிலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...