இது தான்டா ஆர்சிபி.. ஐபிஎல் வரலாற்றிலேயே ஸ்பெஷலான நிகழ்வு.. வரலாறு படைத்த பாஃப் அண்ட் கோ..

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணியின் ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது. இதை பட்டியல் போடுவது ஒரு பக்கம் இருக்க இன்னொரு புறம் இந்த சாதனையை மற்ற ஐபிஎல் அணிகள் நெருங்குவதற்கு இன்னும் சமயம் எடுத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி எனி 263 ரன்களை பல ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அடித்து சாதனை புரிந்திருந்த நிலையில் அதை நெருங்குவதே கடினமாக இருந்து வந்த சூழலில், அதனை இரண்டு முறை ஹைதராபாத் அணியும், ஒரு முறை கொல்கத்தா அணியும் இந்த தொடரில் அதனை தாண்டி சாதனை புரிந்துள்ளது.

மேலும் பெங்களூர் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 287 ரன்கள் சேர்த்து ஐபிஎல் தொடரில் புதிய சரித்திரத்தை உருவாக்கி இருந்த நிலையில் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி கொஞ்சம் கூட தோற்று விடமாட்டோம் என்பதை முதலிலேயே சொல்லாமல் கடைசி பந்து வரை போராடி இருந்தது. சிறிய வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும் போது அவர்களும் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை விளாசிக் கொண்டிருக்க ஓரளவுக்கு போட்டியையும் அவர்கள் நெருங்கி வந்திருந்தனர்.

தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவர் அவுட்டாக, 262 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு அணி. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது பார்க்கப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் சில முக்கியமான சாதனைகளுக்கும் அவர்கள் சொந்தக்காரர் ஆகியுள்ளனர்.

ஐபிஎல்லில் சேசிங் செய்தபோது ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக ஆர்சிபி அணியின் 262 ரன்கள் தற்போது அமைந்துள்ளது. இதற்கு முன்பாக இதே ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி இலக்கை நோக்கி ஆடிய போது 246 ரன்கள் எடுத்திருந்தது சேசிங்கில் அதிகபட்ச ஸ்கோராக ஐபிஎல் தொடரில் இருந்தது.

அது மட்டுமில்லாமல் சேசிங்கில் ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் என்பது ஆர்சிபி அடித்த 49 ரன்கள் தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ரன்களில் அவர்கள் ஆல் அவுட்டானது மோசமான சாதனையாக இருந்தது. அதே ஆர்சிபி அணி தான் தற்போது சேசிங்கில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்பதையும் தங்கள் வசமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...