ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்

ராமேஸ்வரம் கோவில் சென்று எல்லா தீர்த்தத்திலும் நீராடி கடலில் குளித்து ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமியை வணங்கி வருவார்கள். அவ்வாறு ராமநாதஸ்வாமியை வணங்கிய பிறகு நேராக ஊருக்கு செல்லாமல் கந்தமாதன பர்வதம் எங்கே இருக்கு என கேட்டால் ஆட்டோக்காரர்கள் கூட்டிச்செல்வார்கள்.

கந்தமாதன பர்வதம் என்பது ராமேஸ்வரத்தில் உள்ள பெரிய மண்மேடு. இந்த மண்மேட்டில்தான் ராமர் பாதம் உள்ளது. ராமர் ராமேஸ்வரத்தில் வந்து ராமலிங்க பிரதிஷ்டை செய்து சிவலிங்கம் செய்து சிவனை வணங்கினார்.

இதன் காரணமாகத்தான் இங்கு ராமர் கால் பட்ட இடம் புண்ணிய பூமி என்று பலரும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருகிறார்கள்.

இங்கு ராமர் வந்து சென்றதற்கு அடையாளமாக ராமர் பாதம் எனும் ராமரின் பாதுகைகளை வணங்குவதற்கு ஒரு கோவில் உள்ளது. அது ராமேஸ்வரத்தில் உள்ள கந்தமாதன பர்வதத்தில் உள்ளது.

ராமேஸ்வரம் செல்பவர்கள் இந்த கோவிலுக்கும் சென்று வாருங்கள். ராமரின் பாதுகைகளை வணங்கி அருளாசி பெற்று செல்லுங்கள்.

Published by
Staff

Recent Posts