ரஜினியின் 100வது படத்திற்கு மறைமுகமாக உதவிய எம்.ஜி.ஆர்! வியப்பில் ரசிகர்கள்!

அண்ணாத்த திரைப்படத்தின் கலவையான விமர்சனத்தை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் உலக அளவில் பிரமாண்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து ரஜினிக்கு கம்பேக்காக அமைந்தது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 170 ஆவது படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் கைகோர்க்க உள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் முன்னணி ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன்,ராணா, துசாரா விஜயன் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் ரஜினியின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் அவரின் நூறாவது திரைப்படமான ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படம். இந்த படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் மிக ஆன்மீக குணம் கொண்டவர் என்பது நாம் அனைவரும் தெரிந்த உண்மைதான். தனது நண்பர் மூலமாக ராகவேந்திராவின் புகழை அறிந்த ரஜினிகாந்த் ராகவேந்திராவின் பக்தராக மாறத் தொடங்கினார். தான் செய்யும் எல்லா செயல்களிலும் ராகவேந்திரா அவர்களை மனதில் நினைத்துக் கொண்டுதான் செய்ய தொடங்குவது அவரது வழக்கம். அப்படி இருக்க ராகவேந்திரா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து அதில் தான் நடிக்க வேண்டும் என்று ஆசை ரஜினி மனதில் எழுந்துள்ளது.

இந்த ஆசையை தனது சக திரைப்பட நண்பர்களிடம் கூற அவர்கள் இது சரியாக வராது என மறுப்பு தெரிவித்துள்ளனர். ராகவேந்திரா படத்தை எடுத்துக் கொடுத்தால் மற்றொரு படத்தில் தான் நடிப்பதாக ரஜினி சலுகைகள் வழங்கியும் அந்தப் படத்தை எடுக்க யாரும் முன் வரவில்லை.

அந்த நேரத்தில் ரஜினியின் பிறந்தநாள் அன்று ரஜினியை திரை உலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் ரஜினியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்று இருந்தார். அப்போது பாலச்சந்தர் அவர்கள் ரஜினியிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது மிகவும் தயக்கம் இன்றி எனக்கு ராகவேந்திரா படத்தை எடுத்து தருமாறு வேண்டுதல் வைத்துள்ளார். அதற்கு பாலச்சந்தர் உடனே சரி என்று தனது சம்மதத்தை தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய எம்.ஜி.ஆர் படம்!

அதன் பின் ரஜினி தயாரிப்பில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான திரைப்படம் தான் ஸ்ரீ ராகவேந்திரா. இந்த திரைப்படம் ரஜினிக்கு நூறாவது திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சில கமர்சியல் காட்சிகளை எஸ்.பி. முத்துராம் வைத்துள்ளார். ஆனால் அதற்கு பாலச்சந்தர் மறுத்துள்ளார். இந்த படம் நஷ்டமே ஆனாலும் பரவாயில்லை நாம் ரஜினிக்காக எடுக்கும் படம் என்ற ஒரே முடிவாக அந்த படத்தை எடுத்து முடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ரஜினிக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

அந்த நேரத்தில் தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆர் குறைந்த முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு வரி விலக்கு கொடுத்து வந்தார். அந்த வகையில் ஸ்ரீ ராகவா திரைப்படத்திற்கும் வரி விலக்கு கிடைத்தது. ஒரு வழியாக ரஜினியின் ஆசையும் நிறைவேறியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews