ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் ஒரு தோல்வி திரைப்படம் தான்.. இயக்குனர் பி வாசு அதிரடி கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து ரஜினிக்கு கம்பேக் கொடுத்துள்ளது. பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியாகி இருந்தது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து ரஜினியின் கனவு திட்டமான லோகேஷ் உடன் இணைந்து தனது 171 வது திரைப்படத்தில் ரஜினி களமிறங்க உள்ளார். அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களுடன் கைகோர்க்கும் ரஜினி அடுத்த வருடங்களில் தொடர்ந்து மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரஜினியின் திரை வாழ்க்கையில் பல வெற்றி திரைப்படங்கள் இருந்த போதும் சில தோல்வி திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் பல நாட்கள் கழித்து 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பார்.

பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் திரில்லர் கதை அம்சம் கொண்டதாக அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ரஜினிக்கு மீண்டும் கம் பேக் கொடுத்த திரைப்படங்களில் மிக முக்கியமானது. 800 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம் என்ற பெருமை சந்திரமுகி திரைப்படத்திற்கு உண்டு.

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த சிலர் சர்ச்சையான தகவல்கள் தற்பொழுது வெளியாகி வருகிறது. அதாவது இந்த திரைப்படம் 800 நாட்களுக்கு மேல் ஓட வில்லை என்றும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரபு என்பதால் அவரின் சொந்த தியேட்டரான சாந்தி தியேட்டரில் மட்டும் 800 நாட்களுக்கு மேல் இந்த திரைப்படங்கள் ஓடியதாகவும் சில சர்ச்சைக்குரிய தகவல் இந்த படம் வெளியான பொழுது வெளியாகிய மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது இந்த படம் குறித்த மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை இந்த படத்தை இயக்கிய வாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!

அதில் சந்திரமுகி திரைப்படம் ஒரு தோல்வி திரைப்படம் தான். ரஜினி அவர்களின் பாபா திரைப்படத்திற்கு பின்பு வெளியான இந்த திரைப்படம் முதலில் ரஜினி ரசிகர்களால் மட்டுமே கொண்டாடப்பட்டிருந்தது, பெரிதளவும் மக்கள் கூட்டம் இடம்பெறவில்லை. அதன் பின் இந்த படத்தின் சுவாரஸ்யமான கதைக்களம் காரணமாக அடுத்தடுத்து குடும்ப ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து இந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது. மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டில் பெண்மையை குறிக்கும் விதமாக அமைந்திருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பலவீனமாக அமைந்தது.

மேலும் ரஜினிக்கு இணையாக இந்த திரைப்படத்திற்கு நடிகை ஜோதிகாவிற்கும் அதிக பங்கு இருந்தது என்பதால் இந்த திரைப்படம் பெரும்பாலும் தோல்வி திரைப்படமாக கருதப்பட்டது என்று அவர் கூறியிருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. ரஜினிக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்திருப்பார். இந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...