கேஜிஎஃப் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?.. ஆனால், செம ட்விஸ்ட்டு.. இதை எதிர்பார்க்கலையே!..

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் யஷ் அடுத்ததாக டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யஷ் படத்தில் நயன்தாரா?:

மேலும் அந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கரீனா கபூர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. கரீனா கபூர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்கு பிறகு பாலிவுட்டில் அவருக்கு பலப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கன்னட சினிமாவில் இருந்து மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்தியத் திரை உலகின் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா இந்தியிலும் நடித்து விட்டார். இந்நிலையில், கன்னட சினிமாவிலும் கேஜிஎஃப் ஹீரோ யஷ் படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

டபுள் மடங்கு சம்பளம்:

மேலும், இந்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றும் யஷ்ஷுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிக்க நயன்தாரா தனது சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளம் கேட்டிருப்பதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின்னர் நயன்தாராவுக்கு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக அமையவில்லை. கடைசியாக ரஜினிகாந்துக்கு ஜோடியாக தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்திருந்தார். விஜயுடன் இணைந்து பிகில் மற்றும் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்த நயன்தாரா அதன் பின் முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் ஜோடி சேரவில்லை.

தொடர்ந்து அவர் சிறு பட்ஜெட் படங்களில் லீடு ரோலில் நடித்து வரும் நிலையில், கடைசியாக வெளியான அன்னபூரணி படம் வரை அவருக்கு கை கொடுக்கவில்லை. மாதவன் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார். அடுத்து மண்ணாங்கட்டி என்னும் படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...