9 நாட்களில் எடுக்கப்பட்ட ரஜினி படம்.. வில்லன் கேரக்டர்.. மாங்குடி மைனர் படத்தின் மறக்க முடியாத நிகழ்வுகள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொதுவாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை கால்ஷீட் தருவார். ஒரு சில படங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களிலும் முடிக்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று வெறும் 9 நாட்களில் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது என்றால் அது ஆச்சரியம் தான். அந்த படம் தான் மாங்குடி மைனர்.

ரஜினிகாந்த் வில்லன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருந்த காலம் தான் 1970 மற்றும் 1980கள். இந்த நிலையில் தான் விசி குகநாதன் மாங்குடி மைனர் என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். இந்த படத்தின் திரைக்கதையை எழுதிவிட்டு ஹீரோ விஜயகுமார் என்பதை முடிவு செய்தார். இதனை அடுத்து வில்லன் கேரக்டரில் நடிக்க ரஜினியை அவர் அணுகியபோது தான் தற்போது பிஸியாக இருப்பதாகவும் அடுத்த ஆண்டு வரை தன்னிடம் தேதி இல்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் இமயமலை செல்வதற்காக 9 நாட்கள் மட்டும் வைத்திருப்பதாகவும் அந்த 9 நாட்களில் உங்களால் முடிந்தால் இந்த படத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். அதை ஒரு சவாலாக விசி குகநாதன் எடுத்துக்கொண்டார். ரஜினியிடம் 9 நாட்கள் தேதி வாங்கி அந்த 9 நாட்களில் அவருடைய காட்சிகளை முழுமையாக முடித்து விட வேண்டும் என்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அதன்படி சரியாக திட்டமிட்டு 9 நாட்களில் தினமும் 18 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தி ரஜினியின் காட்சிகளை எடுத்து முடித்தார்.

25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி.. 2 நாட்களை திருப்பி கொடுத்த இயக்குனர்.. 175 நாள் ஓடிய குருசிஷ்யன்..!

இந்த படத்தின் கதை என்னவெனில் ஒரு தம்பதியினர் இரண்டு ஆண் குழந்தைகளோடு ரயிலில் பயணம் செய்வார்கள். அப்போது ரயில் திடீரென விபத்துக்குள்ளாகிவிடும். பெற்றோர் ரயில் விபத்தில் இறந்துவிட இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை திருடன் எடுத்துச் சென்று விடுவான், இன்னொரு குழந்தை விபத்து நடந்த ஊரில் வளரும். அவர்தான் மாங்குடி மைனர் ஆன விஜயகுமார்.

திருடன் எடுத்துச் சென்ற குழந்தை ரஜினி ஆக மாறி திருட்டு தொழிலை செய்து கொண்டிருக்கும் நிலையில் தான் ரஜினி செய்த ஒரு கொலை விஜயகுமாரின் நண்பர் மீது விழுந்து விடும். இதனைஅடுத்து விஜயகுமார் தனது நண்பரை காப்பாற்றுவதற்காக உண்மையான கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிப்பார். இவ்வாறு ஒரு கட்டத்தில் ரஜினி தான் கொலைகாரன் என்று கண்டுபிடித்த போது தான் ரஜினி தனது உடன் பிறந்த தம்பி என்பதும் தெரியவரும். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கிளைமக்ஸ்.

ரஜினிகாந்த் நடிக்க மறுத்த கதை….. திருப்புமுனையாக அமைந்த சூப்பர் ஹிட்படம்… எந்த படம் தெரியுமா….?

இந்த படத்தில் விஜயகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருந்தார். எம்என் ராஜன், எஸ்வி ராமதாஸ், ஏ சகுந்தலா, சிலோன் மனோகர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றன. அதில் நீங்க நெனச்சபடி என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் கடந்த 1978 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் விஜயகுமார் எம்ஜிஆரின் ரசிகராக நடித்திருப்பார். எம்ஜிஆர் படம் போட்ட டாலரை அவர் கழுத்தில் அணிந்து இருப்பார். சண்டை காட்சிகளின் போது அவர் அந்த டாலரை பார்த்து வீரம் உண்டாகி எதிரிகளை அடித்து நொறுக்கும் காட்சிகளும் இந்த படத்தில் உண்டு.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

மொத்தத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கொடுத்தது. ரஜினிகாந்த் கொடுத்த 9 நாட்களை பயன்படுத்தி அவருடைய காட்சிகள் அனைத்தையும் எடுத்து கொடுத்த இயக்குனர் விசி குகநாதன் தான் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறலாம்.

Published by
Bala S

Recent Posts