நாகர்கோயிலில் தலைவர் 170 சூட்டிங்… முருகனின் அருள் சூப்பர்ஸ்டாருக்கு எப்படி கிடைக்குதுன்னு பாருங்க..!

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பட பூஜையுடன் முதல் கட்ட பிடிப்பு நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான சூட்டிங் நடைபெறும் என தெரிகிறது.

திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தலைவர் 170 படத்திற்கான சூட்டிங் நடைபெற்ற வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காண மக்கள் படையப்பா படத்தில் வருவது போல கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.

நாகர்கோயிலில் படப்பிடிப்பு:

மக்களின் அன்புக்கு பலரையும் சந்தித்து புகைப்படங்களை எடுத்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவை கொண்டாடி வந்த நிலையில், அமைதியாக சில ஆண்டுகளாக காரணமாக செல்ல முடியாத தனக்கு மிகவும் பிடித்த இமயமலைக்கு சென்று வந்தார்.

வரும் வழியில் வட இந்தியாவில் பல அரசியல் தலைவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வந்தது மிகப்பெரிய அதிர்வலையை அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தியது. மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் போது நடிகர் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஓய்வில்லாமல் நடிப்பு:

அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து தனது நடிப்பையும் கடுமையான உழைப்பையும் போட்டு வருகிறார். ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பிய நிலையில், தலைவர் 170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் இந்த வயதிலும் தொடர்ந்து சினிமா மீதான காதலால் நடித்து வருகிறார்.

திருநெல்வேலியில் சில காட்சிகளை முடித்துவிட்டு தற்போது நாகர்கோவிலில் உள்ள ஆரல்வாய் மொழியில் தலைவர் 170 படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். அங்கே நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சாமியார் ஒருவர் அவருக்கு முருகர் படத்தை பரிசாக வழங்கியதுடன் துளசி தூவி ஆசிர்வாதம் வழங்கிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

முருகன் அருள் கிடைத்தது:

தலைவர் 170 படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். அந்தப்படம் எல்சியூ இல்லை என்பதை லோகேஷ் கனகராஜ் முன்னதாகவே திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால், ஜெயிலர், தலைவர் 170 படங்களைப் போலவே தலைவர் 171 ஆவது படத்திலும் மல்டி ஸ்டார் காஸ்டிங் இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை முதல் நாளிலேயே ரஜினிகாந்த் பார்க்கப் போவதாகவும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews