புது படப்பிடிப்பை வாரணாசியில் தொடங்கிய ரஜினி பட நடிகை.. யார் அவர்? என்ன படம்? விவரம் இதோ..

ரஜினி படத்தில் வந்த நு காவாலயா பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்தார் நடிகை தமன்னா. அந்த பாட்டின் மூலம் சென்ஷேசனல் நடிகையாக மாறிவிட்டார்.அரண்மனை நான்காம் பாகம் மற்றும் தெலுங்கு படங்களின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் தமன்னா புது கிரைம் திரில்லர் படத்தின் படப்பிடிப்பை வாரணாசியில் தொடங்கியுள்ளார்.

tam1

கடந்த 2022 ஆம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான க்ரைம் திரில்லர் படம் ஒடேலா ரயில்வே ஸ்டேஷன். இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஒடேலா-2 வில் தான் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகி படபிடிப்பை தொடங்கியுள்ளார். ஒடேலா ரயில்வே ஸ்டேஷன் இந்தியாவில் உள்ள ஒடேலா கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட திரைப்படம் ஆகும்.

தற்போது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒடேலா-2 வின் படபிடிப்பு காசியின் அமைதியான சூழலில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி கங்கா நதிக்கரையில் படமாக்கப்படவுள்ளது.

tam2

இயக்குனர் சம்பத் நந்தி சஸ்பெண்ஸ், திரில்லர் என உணர்வு பூர்வமாக இப்படம் இருக்கும் என்று உறுதியளிக்கிறார். காந்தாரா படத்திற்கு இசையமைத்து பிரபலமான அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பன்முக நடிகையான தமன்னா தன் அபாரமான நடிப்புத் திறனை இந்த க்ரைம் திரில்லர் படத்தில் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒடேலா-2 படத்தை பல மொழிகளில் வெளியிடப் போவதகாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...