அப்பாவுக்கே இப்படி செஞ்சதில்ல.. இறப்புக்கு முன் சிவாஜி சொன்ன ஆசை.. மகன் ஸ்தானத்தில் நடத்தி கொடுத்த ரஜினி..

நடிப்பில் பல்வேறு பரிணாமங்கள் காட்டி தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என மிக முக்கியமான அந்தஸ்தை பெற்றதுடன் மட்டுமில்லாமல் பல ஆண்டுகள் தனது நடிப்பு சாம்ராஜ்யத்தை நடத்தியவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இன்றைய காலத்தில் நடிப்பில் சாதிக்க வேண்டுமென்று நினைக்கும் இளைஞர்களுக்கு கூட பல ஆண்டுகளுக்கு முன் சிவாஜி நடித்த கதாபாத்திரங்கள் அந்த அளவுக்கு உத்வேகத்தையும் அளிப்பதுடன் மட்டுமில்லாமல் எப்படி ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்த அளவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிப்பின் உதாரணமாக விளங்கி, பல வித்தியாசம் காட்டி பலரையும் பிரமிக்க வைத்திருந்த சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் கூட இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். கமல், ரஜினி, விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்த படிக்காதவன், விடுதலை, படையாப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர் என சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.

அப்படி இருக்கையில், தனது 72 ஆவது வயதில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி சிவாஜி கணேசன் உயிரிழந்தார். அவரது மறைவால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், ரசிகர்களும் கதி கலங்கி போக பலரும் இறுதி அஞ்சலியில் அவரது இழப்பை சகிக்க முடியாமல் பலரும் கதறித் துடித்தனர்.

இந்த நிலையில் சிவாஜி இறப்பதற்கு முன்பே ரஜினியிடம் அவர் தெரிவித்த விஷயம் பற்றிய தகவல் தற்போது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. சிவாஜி கணேசன் இறப்பதற்கு முன்பாக ஒருமுறை ரஜினியிடம் பேசி இருந்த போது, ‘நான் செத்தா கண்டிப்பா நீ வருவேல்ல’ என்று கேட்டுள்ளார். இதற்கு ரஜினியும், ‘என்னப்பா சொல்றீங்க’ என அதிர்ச்சியுடன் கேட்க, ‘இல்லை வயசாகிகிட்டே போகுது. நீ வேற அமெரிக்கா, இமயமலைனு அடிக்கடி வெளியூருக்கு போயிடுற. அதனாலதான் கேட்டேன்’ என சிவாஜி கணேசன் தெரிவித்துள்ளார்.

இறுதி வரை கூட இருப்பேன் என ரஜினி கூற, சிவாஜிக்கு கொடுத்த அந்த வாக்கையும் காப்பாற்றினார். நடிகர் திலகத்தின் இறுதிச் சடங்கில் வண்டியிலிருந்து முடிவது வரை அங்கே இருந்து அனைத்து பணிகளையும் செய்திருந்தார் ரஜினி. இது பற்றி அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில் தனது தந்தைக்கு கூட இறுதி ஊர்வலத்தில் கூட இருக்கவில்லை என ரஜினி தெரிவித்தது, அப்பா ஸ்தானத்தை விட உயர்ந்த இடத்தில் சிவாஜியை அவர் பார்த்துள்ளார் என பலரும் கலங்கி போய் குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...