அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த்!.. ஜெட் வேகத்தில் நிறைவடைந்த தலைவர் 170 மும்பை ஷெட்யூல்!..

நடிகர் சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேக வேகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவை எடுத்து தமிழ்நாட்டில் திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த்

தலைவர் 170 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், மலையாள நடிகை மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி , நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடித்து வருகின்றனர்.

33 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் நிலையில், அவருடன் இணைந்து நடித்த மும்பை ஷெட்யூல் நிறைவடைந்து விட்டதாக லைகா நிறுவனம் இன்று சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் அறிவித்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் அசுர வேகத்தை நடிகர் ரஜினிகாந்த் காட்டி வருவது ஒட்டு மொத்த திரைத்துறையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜெட் ஸ்பீடில் தலைவர் 170 

போகிற வேகத்தை பார்த்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் தலைவர் 170 திரைப்படம் தயாராகிவிடும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தலைவர் 171 ஆவது படம் ஆரம்பிக்கும் என லோகேஷ் கனகராஜ் ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அறிவித்துள்ள நிலையில் ஜனவரி மாதத்திற்குள் தலைவர் 170 படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் சூட் அணிந்து கொண்டு அமிதாபச்சன் நாற்காலியில் அமர்ந்திருக்க, சாதரணமாக சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வரும் பொங்கலுக்கு ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டுக்கு தலைவர் 170 வது படத்தை படக்குழு ரிலீஸ் செய்யும் என்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 ஆவது படம் 2025-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...