ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!

ரஜினிகாந்த்தை வைத்து படம் எடுக்க கோடிகளில் சம்பளம் கொடுக்க தயாராக இருந்த நிலையில் அவர் ஒரு படத்திற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போதே அவர் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

தன்னை நம்பி, தனது விருப்பத்துக்குரிய படம் எடுத்து நஷ்டம் அடைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாலசந்தருக்கு தான் ரஜினிகாந்த் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.அந்தப் படம்தான் ‘வேலைக்காரன்’.

ஒரே நாளில் வெளியான ரஜினி – கமல் இணைந்து நடித்த 2 படங்கள்.. அதன்பிறகு இருவரும் இணைந்து நடித்தார்களா?

velaikkaran2

ரஜினிகாந்த், அமலா நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘வேலைக்காரன்’. இந்த படம் ‘நமக் ஹலால்’ என்ற ஹிந்தி பாடத்தின் ரீமேக்காகும். இந்த படத்திற்கு திரைக்கதையை பாலச்சந்தர் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.

இசைஞானி இளையராஜா இசையில் பெத்து எடுத்தவதான், மாமனுக்கு மயிலாப்பூர் தான், வா வா கண்ணா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்த படம் கடந்த 1987ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் சூப்பர் ஹிட்டாகி தயாரிப்பாளர் பாலச்சந்தருக்கு கோடி கணக்கில் லாபத்தை பெற்று கொடுத்தது. இந்த படத்தில் ரஜினி சம்பளம் வாங்காமல் நடித்ததற்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு.

ரஜினிக்கு தனது கனவு படமான ‘ஸ்ரீ ராகவேந்தர்’ கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த ஆசையை அவர் கே.பாலச்சந்தரிடம் கூறியபோது உனக்காக இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று பாலச்சந்தர் தனது கவிதாலயா நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். ரஜினியை வைத்து இப்படி ஒரு படத்தை தயாரிப்பதா? என்று பலர் கூறியபோதும் ‘ரஜினி ஆசைப்பட்டதற்காக இந்த படத்தை தயாரிக்கிறேன், இந்த படத்தால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை’ என்று கூறி தான் தயாரித்தார்.

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்பி முத்துராமன்.. சமரசம் செய்த பாலசந்தர்.. ‘ஸ்ரீராகவேந்திரர்’ உருவான கதை..!

எதிர்பார்த்தது போலவே இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து நஷ்டம் அடைந்த கே.பாலச்சந்தருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த ரஜினிகாந்த் ‘வேலைக்காரன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு அந்த படத்திற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்க மாட்டேன் என்று பாலச்சந்தருக்கு நிபந்தனையும் போட்டார். இந்த படம் தான் பாலச்சந்தர் தயாரித்த படங்களிலேயே அதிக லாபம் பெற்ற படம்.

velaikkaran 3

இந்த படத்தில் ரஜினிகாந்த், சரத் பாபு, அமலா, பல்லவி, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. ‘வா வா கண்ணா’ என்ற அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த பாடல் எடுக்கப்பட்டிருந்த இடத்தில் பனி அதிகமாக இருந்தது. ரஜினிகாந்த் ஷூ போட்டு நடித்தாலும் அமலா பரதநாட்டிய உடையில் வெறும் காலில் நடிக்க வேண்டிய நிலை இருந்தது.

அமலா ஒவ்வொரு காட்சியையும் நடித்து முடித்துவிட்டு அதன் பின் அடுத்த காட்சி எடுக்கப்படும் வரை ரஜினிகாந்த் ஷூ மீது நின்று கொண்டிருந்தார் என்றும் கூறப்படுவது உண்டு. சிறுவயதில் தாயாரை பிரிந்து விட்டு தாத்தாவின் நிழலில் வாழும் ரஜினிகாந்த் தாயாருடன் எப்படி மீண்டும் இணைந்தார் என்ற ஒன்லைன் கதையை தான் மிகச் சிறப்பாக எஸ்.பி முத்துராமன் இயக்கியிருந்தார்.

velaikkaran 1

இந்த படத்தில் ‘மாமனுக்கு மயிலாப்பூர்தான்’ என்ற பாடலை படமாக்கியபோது ஒரு வயதான தம்பதிகள் தேவைப்பட்டனர். அப்போது திடீரென எஸ்.பி.முத்துராமன் நடன இயக்குனர் புலியூர் சரோஜாவுக்கு வயதான கெட்டப் போட்டு தன்னுடைய யூனிட்டிலிருந்த ஒருவரை அவருக்கு ஜோடியாக வைத்து நடனமாட வைத்தார். இந்த பாடலும் இந்த நடனமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

இந்த படத்தின் காமெடி காட்சிகளில் வி.கே.ராமசாமி சிறப்பாக நடித்திருப்பார். ரஜினி – வி.கே.ராமசாமி காமெடி காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. மொத்தத்தில் இந்த படத்தின் வெற்றி ரஜினிகாந்தின் மார்க்கெட்டை திரை உலகில் உயர்த்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews