அடுத்தடுத்து 3 மாதம் ஒய்வு எடுக்கும் ரஜினி! அந்த இயக்குனர் தான் காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த, ஜெயிலர் திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது த.செ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் பகத் பாசில், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், பாகுபலி வில்லன் ராணா, விஜய் டிவி ரக்சன் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் மற்றும் அதை சுற்று பகுதிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மஞ்சுவாரியாருக்கு இடையேயான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. அதை தொடர்ந்து இந்த படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிக்கு இடையே ஆன காட்சிகளை படக்குழு எடுத்து முடித்துள்ளது. தற்பொழுது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தலைவர் 170 படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக வலம் வருவதால் கமிஷனர் அலுவலகம் போன்ற இரண்டு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும் சென்னை படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இந்த படக்குழு திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளது. புயல் வேகத்தில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த வருட இறுதியில் முடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் தலைப்பிடப்படாத தலைவர் 170 ஆவது திரைப்படம் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசூலிலும் விமர்சன ரீதியாகவும் சில பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தலைவர் 170வது திரைப்படத்தில் ரஜினி மற்றும் அமிதாப்பச்சனின் ரோல்.. கதை குறித்து வெளியான மாஸ் அப்டேட்

லியோ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட தொய்வு ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது.எதிர்மறையான கருத்துக்களை ஏற்றுக்கொண்ட இயக்குனர் லோகேஷ் அடுத்த படத்தில் இந்த தவறுகள் நடக்காமல் இருக்கும் பட்சத்தில் கதையின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் 171 வது திரைப்படத்தின் கதையை உருவாக்குவதில் தற்பொழுது லோகேஷ் ஈடுபட்டு வருகிறார். முழுதாக கதை தயாராகும் பட்சத்தில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தலைவர் 171 வது திரைப்படம் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாகவும், அதற்கிடையில் பிரீ ப்ரொடெக்ஷன் வேலைகள் மட்டும் நடந்து வருவதாகவும் சமீபத்திய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ரஜினி நடித்து வரும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் மாதத்தில் முடிய உள்ளது. அதை தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் 171 வது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதால் இதற்கு இடைப்பட்ட மூன்று மாதங்கள் ரஜினி ஓய்வெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று மாத கால ஓய்விற்க்கு பின் ரஜினி மீண்டும் அதை இளமை துடிப்புடன் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.