இரவு பகலாக ஷூட்டிங்.. ரஜினி செய்த காரியம்.. இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!

Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.

பாலச்சந்தருக்கு கோபம் வந்துரும்.. கமல்ஹாசனை அவர் மட்டும்தான் திட்டனும்.. பிரபலம் பகிர்ந்த தகவல்..!!

இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

அதோடு ரஜினிகாந்த் படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 1993 ஆம் ஆண்டு லதா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து தயாரித்த படம் தான் வள்ளி. ஹரி ராஜ், பிரியா ராமன் வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சில காட்சிகளுக்கு வந்திருப்பார்.

நயன்தாராவின் அன்னபூரணி கொடுத்த பாடம்.. உஷாரான தயாரிப்பாளர்கள்! நயனிற்கு இப்படி ஒரு நிலைமையா?

இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அமைந்தது. இந்த படம் திரையரங்கில் வெளியான போது மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமைந்தது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை இயக்குனர் மணி பாரதி பகிர்ந்துள்ளார்.

வள்ளி திரைப்படத்தில் மணி பாரதியும் பணிபுரிந்துள்ளார். படப்பிடிப்பு சமயத்தில் ஒருமுறை நான்கு நாட்கள் இரவு பகல் என அனைவரும் பணிபுரிய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அப்போது அனைவரும் கலைப்புடன் இருப்பதை பார்த்த ரஜினி என்னவென்று கேட்க அதற்கு இயக்குனர் நட்ராஜ் நான்கு நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது என கூறியுள்ளார்.

கீழே விழுந்தும் எழுந்திருக்காத அஜித்.. அவருக்கு என்ன ஆச்சு? பதட்டமான பட குழு.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த நிகழ்வு..!!

உடனே கோபமான ரஜினி அப்படி அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டு இரண்டு நாட்கள் அனைவருக்கும் விடுமுறை என்று கூறிவிட்டார். இதனால் வெளியில் படப்பிடிப்புக்கு வந்திருக்கும் போது விடுமுறை விட்டால் செலவு அதிகமாகும் என்று இயக்குனர் கூற அனைவரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் என ரஜினி கொடுத்துள்ளார். இவ்வாறு படக்குழு மீது ரஜினி அவ்வளவு அக்கறை காட்டியதாக மணி பாரதி பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.