நயன்தாராவின் அன்னபூரணி கொடுத்த பாடம்.. உஷாரான தயாரிப்பாளர்கள்! நயனிற்கு இப்படி ஒரு நிலைமையா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத் திரை உலகில் கலக்கி வந்த நயன்தாரா சமீபத்தில் ஹிந்தியிலும் நடிக்க தொடங்கியுள்ளார். நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வரும் நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருக்கும் நடிகை நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடி பிரம்மாண்டமாக கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் வாடகை தாயின் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கைக்கு இணையாக சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சொந்த தொழிலில் ஆர்வம் காட்டி வரும் நயன்தாரா பல பிசினஸ் களை ஆரம்பித்து முதலீடு செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வரும் நயன்தாரா சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான கோலமாவு கோகிலா, அறம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான கோல்ட், கான்செப்ட், o2 போன்ற திரைப்படங்கள் மிக சுமாரான வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ஜவான் திரைப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும் அதை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் அவரின் 75 வது திரைப்படம் ஆன அன்னப்பூரணி கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் நயன்தாராவிற்கு பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மேலும் விமர்சன ரீதியாகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு மிகத் தோல்வி படமாகவே அமைந்துள்ளது. .

இதை கவனித்துக் கொண்ட நயன்தாராவின் அடுத்த பட தயாரிப்பாளர் தற்பொழுது அதிரடி முடிவெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து ஒன்று பரவி வருகிறது. அதாவது நயன்தாரா தற்பொழுது அன்னபூரணி திரைப்படத்தை தொடர்ந்து பிரபல யூடியூபர் டியூடு விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படத்தில் நடித்து வருகிறார். பல நாட்கள் நடத்தப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது சில மாற்றங்களை அதிரடியாக தயாரிப்பு நிறுவனங்கள் மாற்றியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன ஒரே வார்த்தை.. சரித்திரம் படைத்த அஜித்!

அதாவது அன்னபூரணி படத்தின் தோல்வியை புரிந்து கொண்ட தயாரிப்பு நிறுவனம் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் பட்ஜெட்டில் கை வைத்துள்ளது. இதுவரை நடந்த படப்பிடிப்புகள் அப்படியே இருக்கட்டும் இனி நடக்கும் படப்பிடிப்புகளில் பட்ஜெட் குறித்து சில மாற்றங்களை ஏற்படுத்தவும் பட்ஜெட்டை குறைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் மண்ணாங்கட்டி படத்தின் பட்ஜெட் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டு குறைக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நயன்தாரா நடிக்கும் படங்களில் அவரின் சம்பளம் மட்டுமே 10 கோடியாக உள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக வரும் பவுன்சர், மேக்கப் உமன் என அனைவரின் சம்பளத்தை சேர்க்கும் பொழுது 12 கோடி வரை செலவாகும். நயன்தாராவின் சம்பளத்தை குறைக்க வாய்ப்பில்லை என்பதால் படத்தின் பட்ஜெட்டில் தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.