மாலத்தீவு போதும் என சென்னை திரும்பிய ரஜினி! நாளைக்கு அப்போ மாஸ் தான்…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் தனக்கான படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினி ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ள மாலத்தீவு சென்றிருந்தார்.

கடந்த பத்து நாட்களாக ரஜினி மாலத்தீவில் தனியாக தனது விடுமுறையை அமைதியாக கொண்டாடி வந்தார். அவ்வப்போது அவர் கடற்கரையில் வாக்கிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது ரஜினி மாலத்தீவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.

மேலும் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து படமும் ஆகஸ்ட் 10 தேதி வெளியாக உள்ளது. ரஜினி இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். படத்தில் நடித்த அனைத்து முக்கிய நடிகர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் மாஸ் காட்டும் அஜித்! வைரலாகும் புகைப்படம்!

மேலும் இந்த படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பல திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் இருப்பதால் இது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ‘ஜெயிலர்’ மூன்றாவது சிங்கிள், ‘ஜூஜூபி’ என்று தலைப்பு வைத்து சமீபத்தில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. ‘ஜெயிலர்’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், மேலும் இசையமைப்பாளர் அனிருத் பாடல்களை ஆடியோ வெளியீட்டு விழாவில் நேரடியாக நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews