ராதாரவியை வீட்டுக்கு அழைத்து ஷாக் கொடுத்த ரஜினி.. பதிலுக்கு ராதாரவி சொன்ன வார்த்தை!

தமிழ் சினிமாவில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இருப்பிடத்தை அவர் மறைந்த பின்னும் அவரைப் போலவே ரியல் குணத்திலும், நடிப்பிலும் கலக்கி வருபவர்தான் ராதாரவி. தமிழ் சினிமாவில் தனது தந்தை விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் நோக்கில் அவரே நாடக கம்பெனி ஆரம்பித்து அதில் நடித்து வந்தார். பின்னர் கமலின் அறிமுகத்தால் இவருக்கு கே.பாலசந்தர் இயக்கிய மன்மத லீலை படத்தில் முதன் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.

வில்லன், குணச்சித்திரம், தந்தை கதாபாத்திரம் என நடிப்பில் பன்முகம் காட்டி இன்றளவும் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருகிறார் ராதா ரவி. அரசியலிலும் கால் பதித்து அவ்வப்போது சினிமா, அரசியல் மேடைகளில் சர்ச்சை கர்த்துக்களைக் கூறி வம்பில் மாட்டிக் கொள்பவர். இப்படி ராதாரவிக்கு பல முகங்கள் உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ள ராதாரவி ரஜினி சினிமாவிற்கு வந்த காலங்களில் அவரை போயா, வாயா என்று அழைப்பது வழக்கமாம். கமலுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் அவரையும் போடா, வாடா, என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வாராம்.

இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்

இந்நிலையில் ரஜினி நடிப்பில் 1997-ல் வெளிவந்த திரைப்படம்தான் அருணாச்சலம். இந்த படத்தினை முதலில் இயக்குவதாக இருந்தது டைரக்டர் பி வாசு. இயக்குனர் பி வாசு இந்த படத்திற்காக நடிகர் நடிகைகளை தேர்வு செய்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக ராதாரவியை நடிக்க வைக்க திட்டமிட்ருந்தார் வாசு. அப்போது அருணாச்சலம் படம் இயக்குனர் வாசுவுக்குப் பதிலாக சுந்தர் சி என மாற்றம் செய்தனர்.

அப்போது கன்னட படம் ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்த ராதாரவியை ரஜினி தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். வீட்டிற்குச் சென்ற ராதாரவியை வரவேற்று பின்னர் அருணாச்சலம் படத்தில் நீங்கள் வில்லன் என முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இயக்குனர் மாறி விட்டார். சுந்தர் சி படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்துக்கு 3 வில்லன்கள் போடலாம் என முடிவு செய்திருக்கிறோம். அதனால் தங்கள் இஇந்த படத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்காது. என்று ரஜினி கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு நடிகரை ஒரு ஹீரோ தன் வீட்டிற்கே அழைத்து இந்த படத்தில் வேண்டாம் என்று கூறியதை ராதாரவியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் அந்த இடத்தில் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கி வைத்து, ”இந்த திறமை முன் உங்கள் அதிர்ஷ்டம் தான் ஜெயித்தது..” என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் ராதாரவி.

Published by
John

Recent Posts