கேமியாவாக நடிக்க ஒப்புக்கொண்டு ஹீரோவாக நடித்த ரஜினி! 25 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கைக்கு கம்பேக்காக அமைந்தது. இந்த படத்தில் கிடைத்த அதிரடி வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்து பல இளம் இயக்குனர்களுடன் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரஜினி தற்பொழுது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் உடன் இணைந்து தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரஜினி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியார், ராணா, துஷாரா விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தனது 171 வது படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. ரஜினி மற்றும் லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் ரஜினி கேமியோவாக நடித்துள்ளார். படத்தில் பத்து முதல் 15 நிமிடங்கள் ரஜினி நடித்த காட்சிகள் இடம்பெறும் என்றும் இந்த இதற்காக ரஜினி 20 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சினிமாவில் சிறப்புக் காட்சியில் நடிப்பதற்காக மட்டுமே 20 நாட்கள் கால்ஷீட் தேவைப்படும் நிலையில் அந்த கால பழைய சினிமாக்களில் 20 ,30 நாட்களில் ஒரு படமே எடுத்து முடித்துள்ளனர். அந்த வகையில் ரஜினிகாந்த் வெறும் 25 நாட்கள் மட்டுமே காட்சி கொடுத்து ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படமும் வெளியாகிய மிகப்பெரிய கிட்டை கொடுத்துள்ளது. அந்த படம் என்ன என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினி அவர்களுக்கு முரட்டுக்காளை போல கதையை எழுதி ரசிகர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பிரபலமாக காரணமாக இருந்தவர் கதாசிரியர் திரு பஞ்சு அருணாச்சலம் அவர்கள்தான். ரஜினி பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்த அவர் இயக்குனர் எஸ் பி முத்துராமன் அவர்களை அழைத்து தான் 15 நாட்கள் மட்டும் கால்ஷீட் தருவதாகவும் அந்த படத்தில் வேறு ஒருவரை ஹீரோவாக நடிக்கட்டும் தான் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக தயாராக இருப்பதாக கூறி ஒரு படத்தின் கதையை உருவாக்கும்படி கூறியிருந்தார்.

மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 68 இல் களமிறங்கும் மூன்று விஜய்!

அதற்கு இயக்குனர் எஸ் பி முத்துராமன் நீங்கள் 15 நாட்கள் கால் சீட் கொடுக்கும் பட்சத்தில் கௌரவத் தோற்றத்தில் அல்லாமல் ஹீரோவாக நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் கூடுதலாக பத்து நாட்கள் மட்டும் கொடுங்கள் மொத்தமாக 25 நாட்களில் நான் ஒரு நல்ல படத்தை எடுத்து தருகிறேன் என உறுதியளித்துள்ளார்.

அப்படி உருவான கதை தான் குரு சிஷ்யன். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபு நடித்திருப்பார் இந்த திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது முழுக்க முழுக்க காமெடியை கதையை மையமாக வைத்த உருவான இந்த திரைப்படம் யாராலும் எளிதில் மறக்க முடியாது

Published by
Velmurugan

Recent Posts