ரஜினிக்கே டஃப் கொடுத்த ரகுவரன்…. ரசிகர்கள் ரசித்த வில்லன்…. வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா….?

சினிமா உலகில் மறைந்து போனாலும் காலத்தால் மறக்கடிக்க முடியாத நடிகர் தான் ரகுவரன். வில்லன் கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தனி ரசிகர் கூட்டத்தையே தனக்காக வைத்திருப்பவர் தான் ரகுவரன். ஒரு படத்தில் சிறிய காட்சியாக இருந்தாலும் அதற்கு அவர் எடுக்கும் பயிற்சி அளப்பரியது. இது குறித்து ரகுவரனின் மனைவி ரோகினி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ரகுவரன் பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

mpraghulead

அதன்படி அடுத்த வாரம் ஊட்டியில் வைத்து ஒரு காட்சி படமாக்கப்பட இருக்கிறது என்றால் அதற்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்காக ரகுவரன் சென்னையில் இருக்கும் போது கொளுத்தும் வெயிலிலும் ஸ்வெட்டர் போட்டு கொண்டு செல்வாராம். ஏன் என்று கேட்டால் அப்போதுதான் கதாபாத்திரம் சரியாக அமையும் என்று கூறுவாராம். அது மட்டும் இல்லாமல் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மைகள் வீட்டிலும் எதிரொலிக்குமாம்.

shocking facts about actor raghu

அவ்வகையில் ரகுவரன் அஞ்சலி படத்தில் குழந்தைகளுக்கு தந்தையாக நடித்த சமயத்தில் வீட்டில் மிகவும் அமைதியாகவும் பாசமாகவும் அனைவரிடமும் நடந்து கொண்டுள்ளார். அதே நேரம் ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சமயத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் மிகுந்த கோபத்துடன் நடந்து கொண்டுள்ளார். மேலும் அனைவரிடமும் எப்போதும் ஏதாவது கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பவர் தான் ரகுவரன்.

Raghuvaran

திரையுலகில் நடிகர்கள் பலருக்கும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் ரகுவரனுக்கு வில்லன் கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்ததாம். ஏன் என்று கேட்டால் வில்லன் கதாபாத்திரத்தில் தான் வெவ்வேறு கோணத்தில் நடிக்க முடியும் என்று ரகுவரன் கூறியுள்ளார். ரஜினிக்கு டப் கொடுத்த வில்லன் என்றால் அது ரகுவரன் தான் இதை ரஜினி ஒரு நிகழ்ச்சி கூறியுள்ளார்.

749047889 raghuvaran death anniversary 1280 720

அப்போது பேசிய ரஜினி இத்தனை வருட திரையுலக பயணத்தில் எனக்கு சவாலாக அமைந்த வில்லன் கதாபாத்திரம் என்றால் அது முதலில் ரகுவரனின் மார்க் ஆண்டனி கதாபாத்திரம் தான் என்று கூறியுள்ளார். மேலும் மார்க் ஆண்டனி இல்லையென்றால் பாட்ஷா இல்லை என்றும் ரஜினி அவர்கள் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews