ஹீரோவான கேபிஒய் பாலா!.. அஸ்திவாரம் போட்ட அந்த பிரபல நடிகர் யாரு தெரியுமா?.. இதோ வீடியோ!..

தொடர்ந்து மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை செய்து வந்த கேபிஒய் பாலா சில படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில், தற்போது ஹீரோவாக போகிறேன் என்கிற அறிவிப்பை வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஹீரோவாகும் கேபிஒய் பாலா:

எல்லாருக்கும் நீ உதவி பண்ணிக்கொண்டு இருக்கிறாய் உனக்கு யாரு உதவி பண்ணுவார் எனது ஒவ்வொரு முறையும் என்னிடம் கேட்கும் போது கண்டிப்பாக கடவுள் உதவி செய்வார் என நம்பிக்கொண்டிருந்தேன். தற்போது கடவுள் போல ராகவா லாரன்ஸ் அண்ணா என்னை ஹீரோ ஆக்குகிறேன் எனக் கூறியுள்ளார்.

என் வாழ்க்கையிலேயே இது முக்கியமான வீடியோ, என்னையும் ஹீரோவாக்கி அழகு பார்க்க காத்திருக்கிறார் லாரன்ஸ் அண்ணா என தனது புதிய வீடியோவில் கேபிஒய் பாலா பேசியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விதவிதமான காமெடிகளை செய்து அசத்தி வந்த பாலா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் போலவே தொகுத்து வழங்கி வருகிறார்.

லாரன்ஸ் மனசே மனசு:

விஜய் டிவி மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகளையும் யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் பாலா சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினார்.

அந்த மேடையிலே அடுத்த சிவகார்த்திகேயனாக பாலா வருவார் என வெற்றிமாறன் கூறியதாக இயக்குனர் லிங்குசாமி சொன்னது ரசிகர்களையும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலாவையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

கையில் இருக்கும் பணத்தை மொத்தமாக மற்றவர்களுக்கு செய்துவிட்டால் ரோட்டில் பிச்சை தான் எடுப்பாய் என்றும் பாலா தொடர்ந்து இப்படி உதவி செய்து வருவது எல்லாம் அவர் விரைவிலேயே அரசியலுக்கு வருவதற்காக செய்யும் வேலை என்றும் அவருக்குப் பின்னால் இருந்து யாரோ அவர் இயக்கி வருகிறார்கள் என்றும் உதவி செய்ய மனம் கூட இல்லாத மனிதர்கள் பாலாவை பற்றி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பேசி வந்த நிலையில் பாலா தற்போது தர்மம் தலைகாக்கும் என்பதுபோல அவர் செய்து வந்த நல்ல விஷயங்கள் அவருக்கு நல்ல இடத்தை கொடுக்க உதவி இருக்கிறது.

பாலா இனிமேல் ஹீரோ என கடைசியாக ராகவா லாரன்ஸ் அவரை தட்டி கொடுத்து தலையைப் பிடித்து ஆட்டி விளையாடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. கூடிய விரைவில் பாலாவை இயக்கப் போவது யார் என்கிற தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...