புரட்டாசி மாத நவராத்திரி விழா…..

இந்தியர்களாகிய நாம் பல விழாக்களை கொண்டாடுகிறோம். மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் தான் விழாக்கள் அதிகமாக நடைபெறுகிறது. இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் விழாக்கள் கொண்டாடப்படுவது நம் மனமகிழ்ச்சிக்காகத் தான். பொதுவாக தெய்வத்தை வணங்குவதற்கு தான் பல விழாக்களை நடத்துகிறோம். அப்படி கொண்டாடப்படும் ஒரு விழாவைப் பற்றி பார்ப்போமா… நவராத்திரி விழாதான் அது… 

இந்த நவராத்திரியை நாம் புரட்டாசி மாதத்தில் தான் கொண்டாடுவோம். பல தெய்வ பொம்மைகளை வைத்து பூஜை செய்து இவ்விழாவை கொண்டாடுவோம். இந்த நவராத்திரி விழா எப்படி உருவானது, இதை கொண்டாடுவதன் அவசியம் என்ன?…

அதாவது புரட்டாசி மாதம் என்பது எமனுக்கு பிடித்த மாதமாகும். இந்த புரட்டாசி மாதத்தில் தான் எமனின் பாசக்கயிறு பலர் மீது விழுமாம்.

எமனிடமிருந்து தப்பிக்கவே இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இராமன், சீதை காலத்திலேயே இவ்விழா கொண்டாடப்பட்டது என்று பலரும் கூறுவர். மேலும் முதன் முதலில் இந்த நவராத்திரி பூஜை எதற்காக செய்யப் பட்டது என்றால் சீதை இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதற்காகத் தான் என்று புராணங்கள் கூறுகின்றனர். 

இந்த நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். மேலும் வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வரும். ஆனால் புரட்டாசி மாதத்தில் கொழு வைத்துக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவே சிறப்பு வாய்ந்தது.

Published by
Staff

Recent Posts