‘விடாமுயற்சி’யில் மகிழ்திருமேனிக்கு முன்னால் வந்த 3 இயக்குநர்கள்..விலகிய காரணம் இதான்..

தற்போது அஜீத் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட்டாவது கொடுங்கப்பா என்று ரசிகர்கள் படக்குழு மீது எரிச்சல் அடையத் தொடங்கியிருக்கும் வேளையில், தளபதி விஜய்யோ லியோ, தி கோட் படங்களை முடித்து விட்டு அடுத்தடுத்த கட்சி வேலைகளில் பிஸியாகிவிட்டார். ஆனால் விடா முயற்சி இன்னும் இழுத்துக் கொண்டே செல்கிறது. ஆனால் ஆறுதலுக்காக ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி அப்டேட்டை வெளியிட்டு அஜீத் ரசிகர்களை அப்போது அமைதிப் படுத்தினார்.

விடாமுயற்சி ஷுட்டிங் பணிகள் தொய்வாகவே நடைபெற்று வரும் வேளையில் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிவிடுமா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விடாமுயற்சியில் இயக்குநர் மகிழ்திருமேனி எப்படி உள்ளே வந்தார் என்பது குறித்து சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

அதில் அஜீத் நடிப்பில் தற்போது உருவாகிவரும் விடாமுயற்சி படத்தினை முதலில் இயக்குவதாக இருந்தது விக்னேஷ் சிவன் ஆவார். ஆனால் சில காரணங்களால் அது தடைப்பட்டது. அதன்பின் கே.ஜி.எப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குவார் என்றும் பேச்சு அடிப்பட்டது. ஆனால் அதுவும் தவிடுபொடியானது.

இந்தக் கதைக்கு ரஜினி செட் ஆக மாட்டாரு..யோசித்த விசுவுக்கு நம்பிக்கை கொடுத்து ஹிட் கொடுத்த கே.பாலச்சந்தர்

இந்நிலையில் 3வதாக AK 62-ல் இணைந்தவர் அஜீத்தின் ஆஸ்தான இயக்குநரான விஷ்ணுவர்தன். பில்லா, ஆரம்பம் போன்ற மெகாஹிட் ஆக்சன் படங்களை ஸ்டைலிஷாக இயக்கி அஜீத்தை வேறொரு தளத்தில் காட்டியவர் மீண்டும் அஜீத்துடன் இணைந்தால் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் நிச்சயம் என்று கூறப்பட்டது.

அப்போது அஜீத்-விஷ்ணுவர்தன் பேச்சுவார்த்தையின் போது விஷ்ணுவர்தனின் சம்பள உடன்பாடுகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும் அவர் ஷாரூக்கானை வைத்து இந்திபடமும் இயக்கப் போவதாக செய்திகள் வந்த நிலையில் அதுவும் தடைபட்டது.

இதன்பின்னர் நான்காவதாக இணைந்தார் மகிழ்திருமேனி. அருண் விஜய், உதயநிதி ஆகியோருக்கு ஆக்சன் படங்களைக் கொடுத்து கவனிக்க வைத்த மகிழ்திருமேனி அஜீத்தைச் சந்தித்து கதை சொல்ல அஜீத் உடனே அவரை டிக் அடித்திருக்கிறார். இப்படித்தான் மகிழ்திருமேனிக்கு விடாமுயற்சி இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...