சொந்த விமானம்.. ராயல் என்ஃபீல்டு பைக்.. மாளிகையில் வாழ்க்கை. புன்னகை அரசி கே.ஆர். விஜயாவின் அறியாத தகவல்..!

தமிழ் சினிமாவில் தற்போது த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் 10 வருடங்களாக நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஆனால் முதல் முதலாக தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் நாயகியாக நடித்தவர் நடிகை கேஆர் விஜயா. இவர் கடந்த 1963ஆம் ஆண்டு ’கற்பகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி 1984ஆம் ஆண்டு வெளியான ‘தராசு’ படம் வரை நாயகியாக நடித்தார். எனவே 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்த பெருமைக்கு கேஆர்விஜயாவுக்கு உண்டு.

நடிகை கே.ஆர்.விஜயாவின் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் அவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அவருடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கே.ஆர்.விஜயா பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார்.

சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 6 நடிகைகள் அவரை விட வயது அதிகமா? யார் யார் தெரியுமா?

கே.ஆர்.விஜயாவின் தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் கேரளாவில் ஒரு நகை வியாபாரியாக இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் பார்த்து வந்த தொழில் நொடித்துவிட்டது. இதனை அடுத்து அவர் கேரளாவில் இருந்து பழனிக்கு குடி பெயர்ந்தார். அங்கு பழனி முருகன் கோவிலில் அலுவலராக வேலை பார்த்துக் கொண்டே நாடகங்களில் நடித்தார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனி நிறுவினார். அந்த நாடகத்தில் காந்திமதி, சுருளிராஜன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தான் நாடகத்திலிருந்து சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் அவரது தந்தை நடித்த நிலையில் கே.ஆர். விஜயாவுக்கு தற்செயலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கற்பகம். இந்த படத்தில் சாவித்திரி நாயகி என்றாலும் கே.ஆர்.விஜயாவுக்கு சிறப்பான கேரக்டர் கிடைத்தது.

இதனை அடுத்து அவர் எம்ஜிஆர் ஜோடியாக ‘தொழிலாளி’ என்ற திரைப்படத்திலும், பின்னர் நாகேஷ்க்கு உடன் ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்திலும் நடித்தார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் பல திரைப்படங்களில், குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உடன் இணைந்து நடித்தார்.

அதேபோல் எஸ்எஸ்ஆர், முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் அவர் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவர் அதிக படங்களில் நடித்தார்.

3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

கேஆர் விஜயாவின் நூறாவது படம் ’நத்தையில் முத்து’. இந்த படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வருவாயை பெற்றுக் கொடுத்தது.

அதேபோல் கே.ஆர்.விஜயாவின் 150வது படம் ’அன்னபூரணி’. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் 175வது படம் ’சத்திய சுந்தரம்’, 200வது படம் ’படிக்காத பண்ணையார்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. கே ஆர் விஜயாவின் 250வது படம் ’பெண்கள் வீட்டின் கண்கள்’ என்பதும் 275 வது படம் ’அம்மு பொண்ணு’ என்பதும் 300வது படம் ’அதிபதி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட அவர் 500 படங்கள் நடித்துள்ளார். தற்போதும் அவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கே ஆர் விஜயாவின் ஆரம்ப கால வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சம்பாதித்த பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்துள்ளார். அந்தக் காலத்திலேயே ஆடம்பரமான பங்களா, சொந்த விமானம், ராயல் என்ஃபீல்டு பைக் என சொகுசாக வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.

நடிகையாக மட்டுமின்றி ஒரு சில படங்களை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த ’நான் வாழ வைப்பேன்’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக சம்பளம்.. தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரி..!

கே.ஆர் விஜயாவின் கணவர் சுதர்சன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் அதிக வருமானம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts