புதுவிதமான இந்த தக்காளி தோசையை செய்து சாப்பிடுங்க…


8c1ac95ef0b96c29385a3f1bd0ac0dd3

இட்லி அரிசி ————— 1 கப்
மெல்லிய ரவை ——— 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி பழம் ————- 2 ( பெரியது)
பூண்டு ———————— 1 பல்
காய்ந்த மிளகாய் ——– காரத்திர்க்கேற்ப
சீரகம் ————————– 1/2 டீஸ்பூன்
பெருங்காய தூள் ——— 2 சிட்டிகை
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, வெங்காயம் சிறிதளவு.

fbb6d42dfe4ce7c1c0c0281e3fd16b48

 

செய்முறை:-
முதலில் அரிசியை நன்றாக கழுவி அதனுடன் காய்ந்த மிளகாயை சேர்த்து 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். அரிசி ஊறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி பழம், அரிசியுடன் ஊற வைத்த காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், தோசைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுத்து கடைசியாக ஒரு டீஸ்பூன் ரவையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் பெருங்காய தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் தடவி மெல்லிய தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு விருப்பப்பட்டால் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி  மூடி போட்டு வேக வைத்து எடுத்து சுட சுட பரிமாறவும்.

வித்யாசமான கம கமக்கும் வாசனையுடன் கூடிய சூடான இந்த தக்காளி தோசையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

குறிப்பு:- இந்த தக்காளி தோசையை மாவு அரைத்து எடுத்ததும் உடனடியாக தோசைகளாக வார்த்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், உப்பு இவற்றை அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.