தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு… ட்விட்டரில் பதிவிட்ட துல்கர் சல்மான்!!

மலையாளத்தில் 80 களில் கொடிக்கட்டிப் பறந்த  நடிகர் மம்மூட்டி, இவருக்கு தமிழிலும் அதிக அளவிலான ரசிகர்கள் உண்டு.  இவரின் மகன் துல்கர் சல்மான் வெகு விரைவிலேயே தந்தையின் இடத்தினைப் பிடித்துள்ளார்.

2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது மலையாளத்தில் வரனே அவசியமுண்ட என்ற பட்த்தில் நடித்துள்ளார், கொரோனா காலத்தில் அனைவரும் ஊரடங்கில் உள்ள நிலையில், படத்தில் ப்ரோமோஷன் வீடியோவை சமூக வலைதளத்தில் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு காட்சியில் வளர்ப்பு நாய்க்கு பிரபாகரன் என பெயர் சூட்டப்பட்டு இருந்ததால் தமிழ் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் பெரிய அளவில் பிரச்சினையானதைத் தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் ட்விட்டரில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “வரனே அவஸ்யமுன்ட்” படத்தில் வளர்ப்பு நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருப்பது தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்ற கருத்து நிலவி வருகின்றது.

உண்மையில் அதுபோன்ற நோக்கத்துடன் நாங்கள் யோசிக்கவில்லை. அந்தக் காட்சியானது பழைய மலையாளப் படமான பட்டனா பிரவேஷம் படத்தில் வரும் ஒரு காட்சியினைக் கிண்டலடிக்கும் காட்சியாகும்.

 மேலும் அந்த மலையாளப் படத்தினைப் பார்த்தால் நிச்சயம் இது அவர்களுக்குப் புரியும், என்னையும், படத்தின் இயக்குனரை வெறுப்பதை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். ஆனால்,

எங்களுடைய குடும்பத்தினர் குறித்து திட்ட வேண்டாம். அந்தக் காட்சி என் அன்பான தமிழ் மக்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Staff

Recent Posts