தமிழ் சினிமாவின் ரீமேக் தயாரிப்பாளர் கே.பாலாஜி… முதல் படமே அடிதூள்!

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் நடிகைகள் திரைப்படம் தயாரிக்க சென்றால் பலர் நஷ்டப்பட்டு தான் திரும்புவார்கள். கே.பாலாஜி போன்ற சிலர் மட்டுமே வெற்றி வாகை சூடுவார்கள். தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றவர் என்றால் அது கே.பாலாஜி தான்.  கே பாலாஜி முதலில் நடிப்பதை விட தயாரிப்பில் தான் ஆர்வம் காட்டினார்.

அதனால் தான் அவர் சிறு வயதிலேயே தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார். அவர் முதலில் நரசுஸ் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார். அதன் பிறகு தான் அவர் நடிகராக அறிமுகமானார். அவ்வையார் என்ற திரைப்படம் தான் அவர் முதலில் நடித்த படம். அதன் பிறகு கதாநாயகன், நண்பன், வில்லன், குணச்சித்திர நடிகன் என பல்வேறு கேரக்டர்களில் அவர் நடித்திருக்கிறார்.

k balaji2

கோடிக்கணக்கில் லாபம் பெற்ற அமிதாப் படம்.. ரீமேக் செய்து தோல்வி அடைந்த ரஜினிகாந்த்..!

அவருக்கு நடிப்பை விட தயாரிப்பில் தான் மிகுந்த ஆர்வம் இருந்தது. குறிப்பாக ஹிந்தி படங்களை ரீமேக் செய்வது என்பது அவருக்கு மிகவும் ஆசையாக இருந்தது. முதன்முதலாக அவர் “சந்த் அவுர் சூரஜ்” என்ற ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்தார். அந்த படம் தான் அண்ணாவின் ஆசை. ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த இந்த முதல் படமே நல்ல வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் எடுத்தது.

இந்த நிலையில் சிவாஜியும் பாலாஜியும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் கே பாலாஜி பல சிவாஜி படங்களை தயாரித்தார். கே.பாலாஜியின் இரண்டாவது தயாரிப்பு படம் சிவாஜி கணேசன் நடித்தது தான். அந்த படம் 1967ஆம் ஆண்டு வெளியான தங்கை.  இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சிவாஜியை வைத்து வரிசையாக பல படங்கள் தயாரித்தார்.

என் தம்பி, திருடன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா போன்ற படங்களை சொல்லலாம். ராஜா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிவாஜியும் பாலாஜியும் அண்ணன் தம்பியாக நடித்திருப்பார்கள். இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தான் கே பாலாஜி தான் தயாரிக்கும் பல படங்களில் கதாநாயகன் பெயரை ராஜா என வைத்ததாக சொல்லப்படுவதுண்டு.

k balaji3

எழுத்தாளர் சுஜாதாவின் இத்தனை நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறதா? ரஜினி, கமல் நடித்த அனுபவங்கள்..!

பாலாஜி ஒரு கட்டத்தில் ரஜினி கமல் படங்களையும் தயாரிக்க தொடங்கினார். கே பாலாஜி தயாரித்த முதல் ரஜினி படம் என்றால் அது பில்லா. இந்த படத்தின் போது ரஜினி மார்க்கெட் இல்லாமல் இருந்தார் இந்த படத்தில் நீங்கள் நடியுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய திருப்பம் கிடைக்கும் என்று பாலாஜி கேட்டுக்கொண்டார். பாலாஜியின் வேண்டுகோளை ஏற்று ரஜினி இந்த படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அதன்பின் ரஜினிக்கு பல படங்கள் குவிந்தது

ரஜினியை அடுத்து கமல்ஹாசனை வைத்து சவால், வாழ்வே மாயம், சட்டம் ஆகிய படங்களை தயாரித்தார். கே பாலாஜியின் திரைப்பட வாழ்வில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்றால் அது சுஜாதா நடித்த விதி என்ற படம் தான். கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசனத்திற்காகவே ஓடிய படம் என்ற புகழையும் பெற்றது.

k balaji1

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்த விடுதலை என்ற படத்தை அவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்தார். சிறந்த படங்கள் பலவற்றை தயாரித்த கே பாலாஜி ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்பதை லைட் பாய் முதல் நாயகன் வரை சொல்வார்கள், ஏனென்றால் அவர் படம் ரிலீசுக்கு முன்பே அனைத்து சம்பளங்களையும் செட்டில் செய்து விடுவார், யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பதை அவரே நேரடியாக நிர்ணயம் செய்து, தனது கையாலே அனைவருக்கும் சம்பளம் கொடுப்பார்.

சிவாஜி தங்கையாக ஸ்ரீதேவி.. அந்த காலத்திலேயே ஒரு ‘புதிய பாதை’..!

இதுவரை ஒரு படத்தில் கூட யாருக்கும் சம்பள பாக்கி வைக்காதவர் என்றும் மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்றும் பெயர் பெற்றவர். கே பாலாஜி படம் என்றால் தைரியமாக நடிக்கலாம் சம்பளம் வீடு தேடி வந்துவிடும் என்று அனைவரும் நம்பும் அளவுக்கு அவர் ஒரு நம்பத்தகுந்த தயாரிப்பாளராக இருந்தார். கே பாலாஜி கடந்த 2009 ஆம் ஆண்டு உடல் நலக் கோளாறு காரணமாக காலமானார். கே பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி அதன் பிறகு பல படங்களை தயாரித்தார். சமீபத்தில் வெளியான அப்பத்தா என்ற படம் கூட அவர் தயாரித்தது தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews