விநாயகர் சதுர்த்தி அன்று முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி அன்று கடைகளில் விற்கும் பிள்ளையாரை வாங்கி  வழிபடுதலைவிட, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜை செய்தால் கூடுதல் பலன்கள் கிட்டும்.

பிள்ளையாரில் வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப் பிள்ளையார், வெள்ளருக்குப் பிள்ளையார் என்று பலவகை பிள்ளையார்கள் உண்டு. ஒவ்வொரு வகைப் பிள்ளையாரை வழிபடும் முறை வித்தியாசமானது அதன் பலன்களும் வேறுபட்டது ஆகும்.


மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். மண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால் வேலியவாய்ப்பு கை கூடும். வெள்ளருக்குப் பிள்ளையாரை வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. வேப்பமரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். அரசமரத்தடியின் கீழ் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வாரிசு உருவாகும். வெள்ளிப் பிள்ளையாரை வழிபட்டால் சங்கடங்கள் தீரும். வெண்கலப் பிள்ளையாரை வழிபட்டால் செல்வம் பெருகும்.

விநாயகருக்கு உகந்த ஆறு விரதங்கள் 
விநாயகர் சதுர்த்தி விரதம், குமாரசஷ்டி விரதம், சித்திவிநாயகர் விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகரை வழிபடக்கூடிய விரதங்கள் ஆகும். 

மற்ற விரதங்களைக் காட்டிலும் ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தியில் வரும் அந்த 10 நாட்கள்  விநாயகரை மனதில் நினைத்து மேற்கொள்ளப்படும் விரதமானது வெற்றி வாய்ப்புகளை கொடுக்கவல்லது, வியாபார ரீதியான முன்னேற்றத்தினையும், வீட்டில் அமைதியையும், மேம்பட்ட கல்வி அறிவினையும், நோய் நொடி இல்லாத உடலினையும் தரவல்லது.

Published by
Staff

Recent Posts