கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரெட் கார்டு வாங்கிய பிரதீப் ஆண்டனி.. ஆனால், ட்விஸ்ட்டு?

பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ராங் போட்டியாளராகவும் டைட்டில் வின்னராகவும் இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர் பிரதீப் அண்டனி. அவர், டாய்லெட் போகும்போது கதவை சாத்தாமல் போகிறார், பெண் போட்டியாளர்கள் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறார், பெண்களிடம் காதல் செய்ய சொல்கிறார், கெட்ட வார்த்தை பேசுகிறார் , வீட்டில் விதியை மீறியது போன்ற காரணங்களால் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்க்கும், கமல் பேசியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் கமல்ஹாசன் சிறு வயதிலேயே பெண்களுடன் நெருக்கமான காட்சிகளை நடித்திருக்கிறார், ஆனால் பிரதீப்பால் மட்டும் பெண்களுக்கு ஆபத்து என எப்படி சொல்லாம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கமலுக்கு பிரதீப் ஆண்டனி பிறந்தநாள் வாழ்த்து

பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே வந்த பிரதீப் ஆண்டனி யாரும் எதிர்பார்காத நிலையில் புகைப்படங்களை போஸ்ட் செய்திருந்தார். அதில் பெண்கள் விஷயத்தில் மோசம் என்று கொடுக்கப்பட்ட ரெட் கார்டை பெண்களுடன் சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடிய படி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதை பார்த்ததும் பெண்கள் விஷயத்தில் நான் மோசம் என்றால் இத்தனை பெண்கள் என் அருகில் வந்து நிற்பார்களா பிக் பாஸ் என்று கேட்பது போல் இருக்கிறது பிரதீப் ஆண்டனி வெளியிட்ட புகைப்படங்கள்.

பிரதீப் வெளியே வந்தவுடன், தன்னுடைய BB7 பரிசுகள் #EdhoEnnalaMudinjathu #SimpleStar “ எனக் குறிப்பிட்டு, அத்துடன் பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த ஸ்டார், லைக், டிஸ்லைக் பட்டன்களை புகைப்படமாக எடுத்து பதிவிட்டு இருந்தார்.

மேலும் மற்றொரு பதிவில் பிரதீப், என்னுடைய விளையாட்டிற்கு சமூக வலைதளத்தில் கிடைத்த வரவேற்பை கண்டு எனக்கு இப்படி தான் இருந்தது என வடிவேலு காமெடி வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல ஆர்ட்டிஸட்டாக ஆக முயற்சி பண்றேன். நல்லா இருங்க, அடுத்த வேலைய பார்ப்போம்” என்று பதிவிட்டு உள்ளார்.

தப்பான தீர்ப்பு

மேலும், சந்திரபாபுவின் ”நான் ஒரு முட்டாளுங்க” பாடலை ஷேர் செய்து பிக் பாஸ் தொடர்பான அதிக லைக்களையும், டிஸ்லைக்களையும் பார்த்துவிட்டேன். அவங்க சம்பாதித்து விட்டு போகட்டும், வாழவிடுங்க.. என்னை வச்சு மத்தவங்க கன்டன்ட் பண்றாங்க, எனக்கான கன்டென்ட் இனிமே நான் பண்ண போகிறேன் என பதிவிட்டுள்ளார்.

கமல் ஹாசன் 69வது பிறந்தநாளுக்கு வாழ்த்து வாழ்த்து கூறிய பீரதிப் அண்டனி, உங்கள் மீது மரியாதை உள்ளது சார் என பதிவிட்டுள்ளார். உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்றும் திரைத்துறைக்கு நீங்கள் செய்த பணி மிகப்பெரியது என்றெல்லாம் பாராட்டி விட்டு கடைசியாக #நல்லா இருங்க, #தீர விசாரிப்பதே மெய் என பதிவிட்டு கமல் தனக்கு ரெட் கார்டு கொடுத்தது தப்பான தீர்ப்பு என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews