மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்கிய பிரபு… இவரது நடிப்பில் இதுதான் ஸ்பெஷல்..!

பொதுவாக வாரிசு நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு அந்த அளவு திறமை இருக்காது என்பார்கள். ஆனால் பிரபு அதில் விதிவிலக்கு. இவர் தந்தையின் நடிப்பில் இருந்து அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வழங்குபவர். அதனால் தான் தனது தனித்துவமான நடிப்பால் தமிழ்ப்பட உலகில் இன்றளவும் உயர்ந்து நிற்கிறார்.

தாய்க்குலங்களேப் போற்றும் வகையில் ஒரு சில ஹீரோக்கள் தான் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கவர் பிரபு. இவரது படங்களில் உடன் நடிக்கும் நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடனான கெமிஸ்ட்ரி ஒத்துப்போகும் அளவு சூப்பராக நடித்து அதகளப்படுத்தி விடுவார் இந்த இளையதிலகம் பிரபு.

மல்டி ஹீரோ சப்ஜெக்ட் எல்லாம் அதிகமாக வந்தபோது இவரைத் தான் தேடுவார்களாம். அந்த வகையில் பிரபு கார்த்திக்குடன் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவை எல்லாமே சூப்பர் டூப்பர்; ஹிட்.

அக்னி நட்சத்திரத்தில் இவர்கள் காம்பினேஷன் சூப்பராக ஒர்க் அவுட்டானது. ராவணன், சுயம்வரம், மாஞ்சாவேலு, அதிசயபிறவிகள், உரிமைகீதம், இரும்புப்பூக்;கள், குஸ்தி என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. அதே போல சத்யராஜ் உடன் பிரபு நடித்த சின்னத்தம்பி, பெரியதம்பி படம் மெகா ஹிட்டானது. ரஜினி, கமல், அஜீத், விக்ரம், பிரபுதேவா, சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், ஜெயம்ரவி என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்த பெருமை பிரபுவையேச் சாரும்.

Prabhu, Vikram prabhu
Prabhu, Vikram prabhu

குண்டாக இருந்தாலும் இவரது குழந்தைத்தனமான வெள்ளந்தி சிரிப்பு காண்போரைக் கொள்ளை கொள்ளும். இவரது டான்சும் எளிமையான ஸ்டெப்களால் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

சின்னத்தம்பி, பொன்மனம், திருநெல்வேலி, குரு சிஷ்யன், வெற்றிவிழா, பில்லா ஆகிய படங்கள் இவரது நடிப்பில் பட்டையைக் கிளப்புவை. தந்தை சிவாஜியுடன் பல படங்களில் நடித்து தனது திறமையை நிலைநாட்டியுள்ளார்.

Neethipathi
Neethipathi

வெள்ளைரோஜா, பசும்பொன், சந்திப்பு, சாதனை, சங்கிலி, ராஜரிஷி, நீதிபதி, உத்தமன், திருப்பம், இருமேதைகள், சுமங்கலி, ஆனந்த், மிருதங்கசக்கரவர்த்தி, நாம் இருவர், வம்ச விளக்கு, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் ஆகிய படங்களில் தந்தையுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார்.

இவசரது மகன் விக்ரம்பிரபுவும் பிரமாதமான நடிகர். கும்கி, சிகரம் தொடு, டாணாக்காரன் என பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். ன்று வரை உற்சாகமாக நடித்துக் கொண்டு இருக்கும் பிரபு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews