இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை காலி பண்ணப் போறது அந்த பெண் போட்டியாளரா?.. பிரதீப் சாபம் சும்மா விடாது!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பல ரசிகர்கள் தற்போது 24 மணி நேரமும் பார்க்கத் தொடங்கி உள்ளனர். அந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வருகிறது.

உமன் கார்டை பயன்படுத்தி ஒரு நல்ல மனுஷனை வெளியே அனுப்பி விட்டார்கள் என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் வேறு வேலை இல்லாத நிலையில், இப்போதாவது முகத்தை காட்டலாம் என நிவாஷினி வரைக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வார நாமினேஷன்

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 ஷோவில் இந்த வாரம் விசித்ரா, தினேஷ், ஆர்ஜே பிராவோ, அர்ச்சனா, ஐஷு மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதீப் ஆண்டனிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து பேசி வரும் விஜே அர்ச்சனாவும் விசித்ராவும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இருவரில் ஒருவர் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்றே ரசிகர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து ஆர்ஜே பிராவோ, தினேஷ் உள்ளிட்டோரும் சேஃபான ஜோனிலேயே உள்ளனர்.

பூர்ணிமா ரவி வெளியேற வாய்ப்பு

ஆனால், வெளியேறும் விளிம்பில் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் ஏகப்பட்ட எதிர்ப்புகளுடன் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரும் ஐஷூ மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் கடைசி இரு இடங்களை பிடித்துள்ளனர்.

பிரதீப் ஆண்டனியால் தனக்கு சேஃப் இல்லை பிக் பாஸ் என மைக்கில் சொல்லி அவருக்கு எதிராக ரெட் கார்டு ஏந்தி ஒட்டுமொத்த புல்லி கேங்கின் தலைவியாக மாயாவுடன் இணைந்து செயல்பட்டு வந்த பூர்ணிமா ரவி தான் இந்த வாரம் வீட்டை காலி செய்து விட்டு கிளம்பப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துக் கணிப்பிலும் ஐஷூவை விடவும் பூர்ணிமா ரவியை வெளியேற்றவே ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து இருவர் இருவராக வெளியேறி வரும் நிலையில், இந்த வாரமும் இரு போட்டியாளர்கள் வெளியேறினால் நல்லா இருக்கும் என்றும் அவர்களுக்கு பதில் பிரதீப் ஆண்டனியை மீண்டும் உள்ளே விட்டால் ஷோவே களைகட்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.