புற்றுநோய் வந்து பணமில்லாமல் தவித்த நடிகை அஸ்வினி.. கல் மனதையே கரைய வைக்கும் கடைசி காலம்..

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புது புது நடிகர்கள் மற்றும் நடிகைகள் அறிமுகமான வண்ணம் தான் உள்ளனர். அவற்றுள் பலர் தடம் தெரியாமல் போகும் பட்சத்தில் சிலர் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவார்கள். அதே போல, இன்னொரு பக்கம் மிக குறுகிய காலத்தில் கொஞ்ச திரைப்படங்களிலேயே அதிக பிரபலமாகும் கலைஞர்களும் உண்டு. அந்த வகையில் மிக முக்கியமான ஒருவர் தான் நடிகை அஸ்வினி.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’பொண்டாட்டி தேவை’ படத்தில் அவர் ஒரு பஸ் கண்டக்டராக நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள்.

நடிகை அஸ்வினி 1983 ஆம் ஆண்டு வெளியான ’ஆனந்த கும்மி’ என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார்.  இந்த படத்தில் ஹீரோவாக நடித்த பாலச்சந்திரனும் அறிமுக நடிகர் தான். இந்த படம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து அவருக்கு சில மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து அவர் ’கற்பூர தீபம்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் சிவகுமார், சுஜாதா, அம்பிகா ஆகியோர்களும்  நடித்திருந்தனர். இதன் பின்னர் அவர் தெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடித்து கொண்டிருந்தார். இடையில் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். இதனிடையே, அஸ்வினிக்கு தெலுங்கில் திடீரென வாய்ப்புகள் குவிந்ததால் அவர் அங்கு மிகவும் பிரபலமானார். கடந்த 1987 முதல் 1989 ஆம் ஆண்டு வரை அவர் தெலுங்கில் மற்றும் சுமார் 20 படங்களில் நடித்தார்.

aswini1

இந்த நிலையில் தான் தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன அஸ்வினி, பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’பொண்டாட்டி தேவை’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் பார்த்திபனுக்கு இணையாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதன் பின்னர் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. விஜயகாந்த் நடித்த தர்மா, பாண்டியராஜன் நடித்த கும்பகோணம் கோபாலு, கார்த்திக் நடித்த உனக்காக எல்லாம் உனக்காக, சத்யராஜ் நடித்த என்னம்மா கண்ணு, பிரசாந்த் ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும், பிரபு நடித்த மிட்டா மிராசு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு மகன் சக்தி நடித்த ஆட்டநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை. நடிகை அஸ்வினி பிரபல கவிஞர் புவியரசு என்பவரின் பேரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். குழந்தை பிறந்த பிறகு முழுக்க முழுக்க குடும்பத்திற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். தனது ஒரே மகனை நன்றாக படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

இந்த நிலையில் மகன் கார்த்திக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திடீரென அஸ்வினிக்கு புற்றுநோய் வந்தது. புற்றுநோயை குணப்படுத்த பணம் இல்லாத நிலையில், மகன் கார்த்திக் கல்லூரி நண்பர்கள் பணம் சேர்த்து அவருடைய அம்மாவின் சிகிச்சைக்காக உதவி செய்தனர். இதை அறிந்து கொண்ட பார்த்திபன் உடனே அஸ்வினியை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து அவரது சிகிச்சைக்கு தேவையான உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் நடிகை அஸ்வினி கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடலை அவரது சொந்த ஊரான ஆந்திராவுக்கு கொண்டு செல்ல பார்த்திபன் தான் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல்வேறு கேரக்டர்களில் நடித்த அஸ்வினி புற்றுநோயால் காலமானது திரையுலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews