அபிராமியின் ரத்தக்கறை படிந்த சால்வையைக் கொண்டு வரும் போலீசார்… அதிர்ச்சியில் கார்த்திக்… கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை எல்லா இடத்திலும் தேடுகிறான். ஆனால் அபிராமி எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் வீட்டுக்கு வருகிறான். ஆனந்த் அவனிடம் அம்மா எங்க என்று கேட்கிறான். அம்மா எங்க போனாங்க அப்டினு தெரியல என்று கார்த்திக் சொல்கிறான். ஆனந்த் நல்லா பிளான் பண்ணி சொத்தை பிரிக்க விடாமல் நடிக்கிறிங்க என்று கூறுகிறான். அப்படி எல்லாம் நடிக்கணும்னு அவசியம் இல்லைனு கார்த்திக் சொல்கிறான். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். அண்ணாமலை அபிராமியை கண்டுபிடித்து தரும்படி பெர்சனலாக போலீசில் புகார் செய்கிறார். கார்த்திக்கும் புகார் அளித்திருந்தார். அதன்படி போலீசார் அபிராமியை தேட ஆரம்பிக்கின்றனர்.

இதற்கிடையில் ரயில்வே ட்ராக் அருகில் யாரோ ஒரு பெண்மணி இறந்து கிடக்கிறார். அங்கு பொதுமக்கள் கூடுகின்றனர். யாரோ பணக்கார வீட்டுப் பெண்மணி போல் இருக்கு என்ன பிரச்சனையோ இப்படி தற்கொலை பண்ணிட்டாங்களே என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் எதாவது மிஸ்ஸிங் கேஸ் வந்திருக்கானு கான்ஸ்டபிளிடம் கேட்கிறார். அவரும் அபிராமி பற்றி கூறுகிறார். அதன்படி விசாரணையை ஆரம்பிக்கின்றனர்.

அங்கு கார்த்திக் வீட்டில் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். அப்போது அங்கு போலீசார் வருகின்றனர். கார்த்திக் உடனே அம்மா பற்றி தகவல் தெரிந்ததா என்று பதட்டத்துடன் கேட்கிறான். இன்ஸ்பெக்டர் ஒரு ரத்தக்கறை படிந்த சால்வையை எடுத்து இது உங்க அம்மாவின் சால்வையா என்று கேட்கின்றார். கார்த்திக் ஆமாம் என்று கூறுகின்றான். இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை தனியாக அழைத்து ரயில்வே ட்ராக் அருகே ஒரு டெட் பாடி இருக்கு நீங்க அடையாளம் காட்ட வரணும்னு கூப்பிடுறார்.

ஆனந்த் கார்த்திக்கை கூப்பிட்டு என்ன ரகசியம் பேசுற உண்மைய சொல்லு என்று கேட்கிறான். கார்த்திக் இன்ஸ்பெக்டர் சொன்னதைப் பற்றி கூறுகிறான். உடனே அண்ணாமலை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கத்தி அழுகிறார். போலீசார் கார்த்திக்கை அழைத்துச் செல்கின்றனர். அங்கு ரயில்வே ட்ராக் அருகே கண்ணீர் ததும்ப கார்த்திக் நடந்து செல்கிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...