ஆன்மீகம்

பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு

எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்ய கூடாது.தற்கொலை செய்தவர்களை இறை சக்தி மன்னிப்பது கிடையாது.
இந்த பிறவி இறை சக்தி நமக்கு கொடுத்திருக்கும் தெய்வீக பிரசாதம் ஆகும்.
தற்கொலை செய்யும் அளவுக்கு இருக்கும் தைரியம் ,பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமாக திசை
திருப்பினால் போதும்.
தற்கொலை செய்த பின்னர் அந்த
ஆத்மாவிற்கு மறு பிறவி கிடையாது.
பசியாலும் தாகத்தாலும் பல ஆண்டுகள் தவிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
தற்கொலை செய்து இறந்தவர்களின் வாரிசுகளில் யாராவது திலா ஹோமம் செய்தால் மட்டுமே மறு பிறவி உண்டாகும்.
இன்றைய கால கட்டத்தில் இதை வீண் செலவு என்று தான் பலர் நினைக்கிறார்கள்.
உங்கள் பரம்பரையில் யாராவது 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தற்கொலை செய்து இறந்து இருக்கிறார்.
300 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல வேறொரு நபரும் தற்கொலை செய்து கொண்டார்.
100 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் பரம்பரையில் இன்னும் வேறு ஒருவர் தற்கொலை செய்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம்.
நீங்கள் செய்யும் திலா ஹோமம் 500 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் தற்கொலை செய்து இறந்தவருக்கு மட்டுமே மறு பிறவியை தரும்.
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவ கடன், பித்ரு கடன், மனுஷ கடன் என்று மூன்று கடன்கள் உண்டு.
இந்த மூன்று கடன் களையும் தீர்க்காமல் ஆயுள் முடிந்தது விட்டால் மீண்டும் இதே ஊரில் இதே பரம்பரையில் பிறவி எடுக்க வேண்டும்.அப்படி பிறக்கும் போது எல்லா விதமான குறைகளும் அந்த பிறவி முழுக்க துரத்தும்.
உழவார பணியும்,
பித்ரு தர்ப்பணமும்,
அண்ணாமலை கிரிவலமும் அடிக்கடி செய்து வந்தால் மட்டுமே ஓரளவு நல்ல விஷயங்கள் கிடைக்கும்.
Published by
Abiram A

Recent Posts