இதை மட்டும் சொன்னால் போதும்… நீங்க எப்படிப்பட்டவர்? உங்க குழந்தையை என்ன படிக்க வைக்கலாம்னு அறிய சுவாரசிய தகவல்கள்

ஜோதிடம் என்பது பெரிய கடல் மாதிரி. என்ன என்ன விஷயம் தேடணுமோ அவ்வளவு விஷயங்களும் அங்கே கொட்டிக் கிடக்கு. அதுல கொஞ்சம் தான் இது.
நீங்க எந்த கிழமைல பிறந்தவங்கன்னு மட்டும் சொன்னா போதும். உங்க ஜாதகத்தையே சொல்லிறலாம். இது பெரும்பாலானோருக்கு பொருந்திருக்கு. அதெப்படின்னு பார்க்கலாமா…

ஞாயிறு

நல்ல உணவு, நல்ல அதிகாரம் இருக்கணும். யாரையும் தேடிப் போக மாட்டாங்க. ராஜா மாதிரி இருப்பாங்க. இதை அவங்க முதல்ல செயல்படுத்தினாலே அவங்க ஆயுள் விருத்தியாகும்.

போன ஜென்மத்துல அரச குடும்பத்துல கூட பொறந்திருக்கலாம். சொந்தத் தொழில், அரசு வேலை, அப்பாவின் துணை இருந்தால் ரொம்ப நல்லாருக்கும்.

திங்கள்

பக்தி சிரத்தையான நபர். நல்ல வாத்தியாராகவோ, நல்ல மாணவராகவோ இருப்பார்கள். மிமிக்ரி பண்றவங்களும் இந்தக் கிழமையில் பிறந்திருப்பாங்க. அப்பாவை மட்டும் தப்பா பேசிரக்கூடாது. அப்பாவை விட்டுக் கொடுக்காத நபர்னா இவங்க தான். அப்பா தான் என் முதல் ஹீரோன்னு கடைசி வரை சொல்வாங்க.

Artist
Artist

யாராவது ஒருத்தர் பெரிய மனுஷரோட பக்கத்துல வாழணும். இல்லேன்னா அப்பாவ சார்ந்து வாழ்ந்தாங்கன்னா இவங்க லைப்ல ஜெயிச்சிருவாங்க. புராண கதைகள், இலக்கியங்களில் ஆர்வமா இருப்பாங்க. புத்தகம் படிக்குறதுல ஆர்வத்தை ஏற்படுத்தலாம். இவங்க ஆயுள் விருத்தியாகும். கத்துக்குறதுக்கு ஏதாவது நல்ல விஷயம் இருந்தா கத்துப்பாங்க.

அரைச்ச மாவையே அரைக்க பிடிக்காது. அதனால தேடிக்கத்துக்குற விஷயத்தை இவங்க செய்யலாம். இந்தக் கிழமைல பிறந்தவங்க லைப்ரரியன், பத்திரிகை துறை, சினிமா துறை, மிமிக்ரின்னு இருக்காங்க.

செவ்வாய்

முதல்ல சொத்து இருக்குறது முக்கியம். அடுத்து லைப் பார்ட்னர் நல்லா அமைஞ்சிருக்காங்களாங்கறது முக்கியம். இந்த ரெண்டுமே சரியா அமையலன்னா நோய் வந்துடும். பயங்கர டென்ஷனா இருப்பாங்க. இவங்க எப்பவுமே கடன் வாங்கிறக் கூடாது.

அப்படி இருந்தா லைப்ல நல்ல ஆரோக்கியமா இருப்பாங்க. குழந்தைங்க செவ்வாய்க்கிழமை பொறந்துருக்காங்கன்னா அவங்க விளையாடப் போனா தடுக்கக்கூடாது. ஏன்னா அவங்க விளையாட்டுல தான் பெரிய ஆளா வருவாங்க. நம்ம கிரிக்கெட் கேப்டன் டோனி செவ்வாய்க்கிழமை பொறந்தவரு.

Doni
Doni

அவரைப் போல யாரும் விளையாட முடியாது. திறமையானவரு. 10 பேரு விளையாடுனா செவ்வாய்க்கிழமை பொறந்தவங்க விளையாடும்போது தனியா தெரிவாங்க. அவங்க அதுல முதன்மையா இருப்பாங்க. நம்ம குழந்தை என்ன படிக்கணும்? என்ன செய்யணும்கறதைக் கூட இந்த கிழமையை வச்சி முடிவு பண்ணிறலாம்.

விளையாடும்போது படிக்காம ஏன் விளையாடப் போறேன்னு தடுத்தோம்னா நம்மளே அவங்களுக்குக் கஷ்டத்தை உருவாக்குறோம். முட்டுக்கட்டைப் போடறோம்னு அர்த்தம்.

புதன்

பேச்சாற்றல் அதிகம். மீடியேட்டரா இருப்பாங்க. உடனே உடனே ஜெயிக்கணும்னு ஆசைப்படுவாங்க. அக்கவுண்ட்ஸ், மீடியேட்டர், பத்திரிகை தொழில்ல இருப்பாங்க.

இவங்க நினைக்குறதை உடனே உடனே ஜெயிச்சிட்டாங்கன்னா ஆயுள் விருத்தியாகும். இவங்க ரொம்ப புத்திசாலி.

வியாழன்

குருவோட தன்மையில இருப்பாங்க. சொல்லிக் கொடுக்குற தன்மையில இருப்பாங்க. ஆலோசனை சொல்றவராகவோ, அட்வைசராகவோ இருப்பாங்க. பணம் இருந்தா அறிவைத் தேடுவாங்க. அறிவு இருந்தா பணத்தைத் தேடுவாங்க.

இவங்க பெரும்பாலும் குடும்பத்துல முதல் பையனா, முதல் பொண்ணா இருக்குற வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் கர்வம் இருக்கும். இது இல்லாம இருந்தா ரொம்ப நல்லது.

வெள்ளி

இவங்க பார்த்தாலே தெரியும். பத்து பேரில தனியா தெரிவாங்க. பளிச்சுன்னு வசீகரமா இருப்பாங்க. இவங்க வாகனத் தொழில் பண்ணுவாங்க. ரொம்ப சுத்தமா இருக்கணும். கையில ரொக்க பணம் எப்பவும் இருக்கணும். இல்லேன்னா கேட்ட பணத்தைக் கொடுத்து உதவணும்.

பொதுவாக இறந்தவங்களுக்கு அமாவாசை அன்னைக்கு திதி கொடுப்பாங்க. அது ரொம்ப நல்லது.

சனிக்கிழமை

சனிக்கிழமை பிறந்தவங்க தத்துவ வித்தகம் அறிந்தவங்க. சின்ன வயசுல ஏன் எதுக்குன்னு 1008 கேள்வி கேட்பாங்க. உண்மையான அன்புக்காக எதையும் செய்வாங்க. பணம் தேடும் உலகத்துல பாசத்தைத் தேடுவாங்க. நல்லவங்களை நல்ல விஷயங்களைப் பார்த்தால் முகமும், அகமும் மலரும். சனி தான் நீதிமான்.

சரியான அன்பு கிடைத்தால் அவரை அடிச்சிக்க உலகத்துல ஆளே கிடையாது. ஈகோ இருக்காது. தலைக்கனம் உள்ளவங்களைப் பிடிக்காது. அவர்களை அடக்குபவர்களைப் பிடிக்கும்.
உழைப்பு இருந்தா ஆரோக்கியம் எந்த விதத்திலயும் பாதிக்காது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews