பெருமாள் கோவில் பிரசாதமான உளுந்து மிளகு வடை செய்வது இப்படித்தான்…


எல்லா கோவில்களிலும் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், லட்டு, அதிரசம் .. பிரசாதம் கிடைத்தாலும் பெருமாள், ஆஞ்சிநேயர் கோவில்களில் மட்டும் உளுந்து+மிளகு வடை பிரசித்தம். திருப்பதியேலேயே முன்பு இந்த வடைதான் பிரசாதமாய் இருந்தது. 1980ககீழ்க்காணும் முறைப்படி செய்தால் வடை சீக்கிரத்தில் கெட்டுப்போகாது. கால்நடையாய் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வர மாதங்கள், வாரங்கள் ஆகும். அந்த காலக்கட்டத்தில் புளியோதரையும், லட்டும், சர்க்கரையும் தாங்காது. அதிரசமும், உளுந்துவடையும் வாரக்கணக்கில் கெட்டுப்போகாது. அந்த காரணத்தினால்தான் முன்பு பெருமாள் கோவில்களில் உளுந்து_மிளகு வடை பிரசாதமாய் இருந்தது.

திருப்பதியில் 1715 ஆகஸ்டு மாசத்தில் லட்டின பிரசாதமாக படைக்க ஆரம்பித்தனர். 1803ல்தான் பிரசாதங்களை விற்கும் முறை திருப்பதியில் அமலுக்கு வந்தது. அப்பவும் பூந்திதான் விற்கப்பட்டது. 1940லிருந்துதான் பூந்தி லட்டாக மாறி திருப்பதி என்றாலே லட்டு என்ற பெயர் வந்தது..

0e462f40be6401c46b44b28b4b7a4d26

தேவையான பொருட்கள்..

உளுந்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

உளுந்தம் பருப்பை ஊற வைக்காமல் பருப்ப்பினை கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும். மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். தண்ணீர் முற்றிலும் வடிந்த நிலையில் உளுந்தபருப்பை கொரகொரப்பாக அரைக்கவும்.. அரைத்த உளுத்தம்பருப்பு மாவை பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசந்தக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். சுத்தமான ஈரத்துணி அல்லது வாழை இல்லை, அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வடை மாவினை கொஞ்சம் எடுத்துக்கொண்டு மெல்லிசாக தட்டி, நடுவில் ஓட்டை போட்டு இரு பக்கமும் சிவக்க விட்டுஎடுத்தால் கோவிலில் கிடைக்கும் உளுந்து+மிளகு வடை ரெடி

வாரக்கணக்கில் இந்த வடை கெட்டுப்போகாது..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews