வரும் வாரம் முதல் கோவில்கள் திறப்பு- மக்கள் மகிழ்ச்சி

கடந்த வருடம் 2019 இறுதியில் ஆரம்பித்த கொரோனாவின் கோர தாண்டவம் இன்றுவரை பல தாங்க முடியாத நஷ்டங்களையும் கஷ்டங்களையும் கொடுத்து சென்றுவிட்டது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வருடமும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பின்பு தொற்று நீங்கியதும் திறக்கப்பட்டன.

அதுபோல கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தபோதே ஆலயங்கள் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு பின்னும் நீண்ட நாட்கள் கொரோனா தொற்று குறையாததால் கோவில்கள் அடைக்கப்பட்டவை அப்படியே இருந்தன.

தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இந்த வாரம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அதில் அனைத்து கோவில்களும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கோவில்கள் திறக்கப்பட இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Published by
Staff

Recent Posts