பூர்வஜென்ம தமிழ் படங்கள்- பாகம் 1

பூர்வ ஜென்மம் பற்றிய நினைவுகள் என்பது எங்கோ எப்போதோ யாருக்காவது திடீரென வரும் அபூர்வ நினைவாகும். திடீரென்று சிறுவர் சிறுமிகளுக்கு கூட அப்படியான ஞாபகம் வந்து முன் ஜென்மத்தில் இந்த இடத்தில் இருந்தேன் என அந்த இடத்தை அடையாளம் காட்டி சென்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அப்படிப்பட்ட சில படங்கள் பற்றி இந்த பதிவு.


நெஞ்சம் மறப்பதில்லை 

கல்யாணகுமார் நடித்து  இயக்குனர் ஸ்ரீதர்    இயக்கத்தில் வெளியான முன் ஜென்ம காதல் கதை
முன் ஜென்மத்தில் ஜமீனனான கல்யாணகுமாரின் காதலை பெரிய ஜமீனான நம்பியார் பிரித்து
விடுகிறார் .

அடுத்த ஜென்மத்தில் நண்பனின் கிராமத்துக்கு விடுமுறைக்கு வரும் கல்யாணகுமார்.
தான் பார்த்து பழக்கப்பட்ட இடம் போலவே நண்பனின் கிராமம் தெரிவதால் விரிகிறது ப்ளாஷ்பேக் .முன் ஜென்ம நினைவுகளை அற்புதமாக சொன்ன படம் நெஞ்சம் மறப்பதில்லை.

முன் ஜென்மத்தில் தன் காதலை பிரித்த தந்தை நம்பியாரே பல வருடம் கழித்தும் அதே இடத்தில் 100 வயதை கடந்த முதியவராக வாழ்ந்து இந்த பிறவியிலும் இணை சேர்ந்த அதே காதல் ஜோடியை பிரிக்க முயலும் வித்தியாசமான கதை. எதையும் புதுமையாக செய்யும் ஸ்ரீதர் இயக்கிய படம். இதுவாகும்.

தமிழில் முதன் முதலில் வந்த முன் ஜென்மக்கதை படம் இதுவாகும். இதற்கு முன் இப்படியான கதை தமிழ் சினிமாவில் வந்ததில்லை.

நெஞ்சம் மறப்பதில்லை என்ற இனிய பாடல் நம் மனதை என்னவோ செய்வது நிச்சயம்.

நாளை மற்றோரு பதிவில் இன்னும் சில மறக்க முடியாத பூர்வ ஜென்ம படங்கள் பற்றி பார்ப்போம்.

Published by
Staff

Recent Posts