பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பா. ரஞ்சித்…

தமிழில் சென்சேஷனல் படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினர். வெங்கட் பிரபுவின் சென்னை 28, சரோஜா, கோவா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பா. ரஞ்சித் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் பா. ரஞ்சித். காதல் நகைச்சுவை கதையம்சத்தை கொண்டிருந்த ‘அட்டகத்தி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனது.

அதன் பிறகு நடிகர் கார்த்தியை வைத்து 2014 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ்’ என்ற படத்தை எழுதி இயக்கினார். இது அரசியல் கலந்த அதிரடி திரைப்படமாகும். இந்த படத்தின் மூலம் பா. ரஞ்சித் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அப்படி ஒரு வெற்றியை ‘மெட்ராஸ்’ திரைப்படம் அவருக்குப் பெற்றுத் தந்தது. மேலும் பல விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார் பா. ரஞ்சித். அடுத்தடுத்து நடிகர் ஆர்யாவை வைத்து ‘சர்பட்டா பரம்பரை’ மற்றும் நடிகர் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ ஆகிய படங்களில் பிஸியானார்.

‘தங்கலான்’ படம் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகளில் உள்ளது. இதற்கிடையில் பா. ரஞ்சித் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். விரைவில் பட வேலைகள் துவங்க இருப்பதாகவும் அந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...