கன்னாபின்னான்னு இப்படியா Trending ஆகுறது? REELS மழையில் நனையும் பந்தயப் புறா Song

இணையத்தில் சினிமா அல்லாத சில பாடல்கள் அவ்வப்போது வெளிவந்து இணையத்தையும், சோஷியல் மீடியாக்களையும் ஆட்டம் காண வைக்கிறது. மைமா பேரு அஞ்சல, என்ஜாயி எஞ்சாமி பாடலுக்குப் பிறகு தற்போது மியூசிக் ஆல்பம் பாடல் ஒன்று தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது என்றால் பந்தயப் புறா பாடல் தான்.

அமேசான் பிரைம் தளத்தில் கடந்த மே மாதம் Modern Love Chennai என்ற பெயரில்  வெளியான இந்தப்பாடலுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துப் பாடியுள்ளார். பாக்கியம் ஷங்கரின் வரிகளில் உருவான இப்பாடல் தான் இப்போது இணையத்தை ஆட்டுவிக்கும் மந்திரப்பாடல்.

Modern love

ஆரம்பத்தில் இந்தப் பாடலுக்கான வரவேற்பு சரியாகக் கிடைக்காத நிலையில் ரீல்ஸ் பிரியர்கள் நடனமாடி சோஷியல் மீடியாக்களில் பதிவிட பற்றிக் கொண்டது ஜிங்கிரதங்கா. கிட்டத்தட்ட 140K ரீல்ஸ்கள் பந்தயப்புறா பாடலை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் என அனைத்து சமூகவலை தளங்களிலும் பந்தயப்புறா கொடிகட்டிப் பறக்கிறது.

விஜய்யுடன் போட்டி போட்ட ஏ.ஆர் முருகதாஸ்! நான்கு வருடங்கள் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?

லியோ, ஜெயிலர் படப் பாடல்களின் ரீல்ஸ்களுக்கு இணையாக பந்தயப் புறா பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது. இது குறித்து இப்பாடலின் ஆசிரியர் பாக்கியம் ஷங்கர் கூறும் போது, “கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. பசங்க எங்கேயோ தூக்கிட்டுப் போயிட்டாங்க“ என்று கூறினார்.  இந்தப் பாடலின் வெற்றியால் இசைப் பிரியர்கள் தங்களது பிளே லிஸ்ட்டில் ஷான் ரோல்டனையும் இணைத்து அவரின் இசையில் உருவான ஜெய்பீம் உள்ளளிட்ட பல பாடல்களையும் மீண்டும் கேட்டு வருகின்றனர் இசை ரசிகர்கள்.

காதல் கானா வரிசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலின் வீடியோவும் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. இதில் வரும் வரிகளான

பிஸ்மி பரோட்டா சால்னா
பிச்சி போட்டு ஊட்டுவேன் என் ஆளுன்னா
குஸ்மி எவனா உள்ள பூந்தாண்ணா
டிச்சுமி அடிச்சா அவன் செத்தாண்டா

டும்மா கோலி அட்ச்சி பாத்தான் தாமசு
ஆனா எங்க டாவு லாலாகுண்டா பேமசு
தங்கத்தாலி எத்துக்குத்தான் கில்பட்டு
கேளு பேட்டையில எங்க காதல் கல்வெட்டு
கல்வெட்டு

ஜிங்கர்ததங்கா
ஜிங்கர்ததங்கா
பந்தய புறா
அவ பந்தய புறா

போன்ற சென்னைத் தமிழில் இயற்றப்பட்டுள்ள வரிகளை ரீல்ஸ்களாக உருவாக்கம் செய்து சும்மா லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews