பதினைந்தே நாள்களில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜி படம் இதுதான்…!

குறுகிய நாள்களில் படம் தயாராகிறது என்றாலே பெரிய விஷயம் தான். அதிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்றால் படம் தரமான சம்பவத்தை நிகழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த பலே பாண்டியா படம் 15 நாள்களில் உருவானது.

1962ம் ஆண்டு மே மாதம் பூஜை போட்டார்கள். அதே மாதத்தில் 26ம் தேதி படம் ரிலீஸ். கதையோ சுவாரசியமானது.

வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறான் நாயகன் பாண்டியன். அவனை ஒரு மாதம் கழித்து நீ தற்கொலை செய்து கொள் என தன்னோட அழைத்துச் செல்கிறான் கபாலி. 1 மாதம் சென்றதும் அவனைத் தன் நண்பன் மருதுவை விட்டு கொலை செய்து இன்சூரன்ஸ் தொகை 1 லட்சத்தை அடைய திட்டமிடுகிறான் கபாலி.

இந்நிலையில் வசந்தி என்ற பெண்ணைக் காப்பாற்றுகிறான் பாண்டியன். அவளோ பணக்காரப் பெண். மகளைக் காப்பாற்றியதற்காக அவளது தந்தை பாண்டியனைத் தத்தெடுக்கிறார்.

கபாலி பாண்டியனைக் கொன்றுவிட்டு மருதுவை அவன் இடத்திற்கு மாற்றிவிட முடிவு செய்கிறான். அப்படி செய்தால் லட்சங்களை அனுபவிக்கலாம் என நினைக்கிறான். பாண்டியனை கடலில் தூக்கிப் போடுகிறார்கள். அவனின் இடத்தில் உடன்பிறந்த அண்ணன் சங்கர் வருகிறான்.

PB
PB

கபாலியும், மருதுவும் திகைக்கின்றனர். மீனவர்களின் உதவியால் பாண்டியன் பிழைத்துக் கொள்கிறான். சகோதரனுடன் இணைந்து எப்படி ஜெயிக்கிறான் என்பதே கதை.

சிவாஜி முற்றிலும் மாறுபட்ட 3 வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். எம்.ஆர்.ராதாவும் இரட்டை வேடம். மாமா மாப்ளே என்று சிவாஜியும், எம்.ஆர்.ராதாவும் பாடும் பாடலில் தியேட்டரே கைதட்டலால் குலுங்குகிறது. எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் அனைத்தும் செம.

வாழ நினைத்தால் வாழலாம் என்ற சூப்பர்ஹிட் தத்துவப்பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது. பாலாஜி, தேவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். பி.ஆர்.பந்துலுவின் கைவண்ணத்தில் உருவான இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...